Saturday, 20 August 2022

சிதம்பரம் அமைப்புதினம்

20.8.2022 சனிக்கிழமை மாலை சிதம்பரம் தெற்கு சென்னை தொலைபேசியில் தொலைபேசி நிலையத்தில் மாதாந்திர கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இக்கூட்டத்தில் ஏ ஐ பி எஸ் என் எல் பி ஏ ‌‌ 13 வது அமைப்பு தினம் மற்றும் மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருஞானம் அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு 
திரு ஏ நடராஜன் 
பகுதி துணைத்தலைவர் தலைமையேற்று நடத்தித் தந்தார்.
 திரு ஜி எஸ் குமார் 
பகுதி ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நல்கினார் கூட்டத்திற்கு 
50 பேர் வந்திருந்து சிறப்பித்தனர்.
 திரு ஏ ஜெயக்குமார் அவர்கள் அமைப்பு தினம் பற்றியும் நமது நலச்சங்க செயல்பாட்டை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் திரு எச் இஸ்மாயில் மரைக்கார் சேலம் தமிழ் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது பற்றி எடுத்துரைத்தார்.
திரு.டி.விஸ்வலிங்ம் பகுதி தலைவர் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான செயல்பாடுகள் பற்றியும் அதை நாம் தேசிய கடமையாற்றி மாற்றிட வேண்டும் எனவும் தெரிவித்தார். திருமதி ராஜகுமாரி தமிழ்மணி அவர்கள் வழக்கம்போல் கோர்வையாக தங்கு தடையின்றி நல்ல கருத்துக்களை தெரிவித்தார்.
திரு.டி.பி.குருமூர்த்தி நல்ல பல வாழ்வியல் கருத்துக்களை தெரிவித்தார்.
திரு கே சந்திரமோகன் மாவட்ட உதவி செயலாளர் சேலம் மாநில மாநாடு,சிஜி.எச். எஸ் மற்றும் வருமான வரி , சேமிப்பு சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்தார் .
திரு என்.திருஞானம் அவர்கள் ஏற்புரை நல்கும்பொழுது அவரை பாராட்டும் விதமாக திரு எஸ் ரவிச்சந்திரன் எஸ் டி ஈ அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .
திரு திருஞானம் அவர்கள் தமது ஏற்புரையில் தான் பணிக்கு சேர்ந்தது முதல் தொழிற்சங்க பணியை சேர்த்து பணியாற்றியது பற்றி விளக்கமாக தெரிவித்தார் இந்த அமைப்பு தினம் அன்று கடலூரில் உருவாகிய இடம் பற்றி நினைவுகூர்ந்தார். மேலும் மாநில செயலர் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளை பற்றியும்
தீர்மானங்கள் பற்றியும் தெரிவித்தார் .
அடுத்து மாவட்டத் தலைவர் பி ஜெயராமன் அவர்கள் FMA பற்றியும் CGHS பற்றியும் அமைப்பு தினம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் .
திரு கே லட்சுமி நாராயணன் அவர்கள் பகுதி பொருளாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி விழாவை முடித்து வைத்தார்.
 இன்றைய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியை திருமதி கீதா ஜவகர் அவர்கள் மனமுவந்து ஏற்று ஏற்பாடு செய்துள்ளார் .
இந்த கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறினார் G.S. குமார். 









No comments:

Post a Comment