Sunday, 14 April 2024

 கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம் 

13/4/2024 சனிக்கிழமை மதியம் 03:30 மணி அளவில் பகுதி தலைவர் தோழர். B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நமது சங்க வளாகத்தில் நடைபெற்றது. பகுதி அமைப்பு செயலாளர் தோழர். E.விநாயகமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மே மாதம் நடைபெற இருக்கின்ற மாவட்ட மாநாட்டிற்கான நன்கொடை , வழக்கு நிதி, மாவட்ட மாநாட்டை ஒட்டி கடலூர் பகுதி மாநாட்டை நடத்துவது, ஓய்வூதிய மாற்ற வழக்கினைப் பற்றிய கருத்துக்கள், தனிநபர் பிரச்சனைகள் இவற்றைப் பற்றி கருத்துக்களை கூறுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும் பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் இருக்கின்ற உறுப்பினர்களுக்கென தனியாக ஒரு பகுதியை துவக்குவது பற்றியும் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தோழியர்.V.விஜயலட்சுமி அவர்கள் பேசும்பொழுது மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அரசு பள்ளியை சேர்ந்த ஒரு ஏழை மாணவி கல்விக்கு உதவி செய்யும் வகையில் ₹12,000 நன்கொடை பெறப்பட்டுள்ளது என்று பதிவு செய்தார். வரும் கல்வியாண்டில் இருந்து நாம் இந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்றும், மத்திய சங்க வேண்டுகோளின்படி வழக்கு நிதியையும், மாவட்ட மாநாட்டு நிதியையும் தாராளமாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்

மாவட்ட உதவி தலைவர் தோழர். P. சாந்தகுமார்,மாவட்டத் தலைவர் தோழர்.K. சந்திரமோகன், அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர்.P. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் அவர்கள் பேசும்பொழுது FMA பிரச்சனையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நாம் அடைந்ததை குறிப்பிட்டார். கடைசி காலாண்டு வரை போடப்பட்டுவிட்டது என்ற செய்தியை கூறினார். PAN Aadhaar இணைப்பு பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் செய்யாதவர்களுக்கு மட்டும் 20% வருமான வரி FMAவில் பிடித்துள்ளதையும் கூறினார். உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதிலும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதிலும் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். 28.05.2024 அன்று நடைபெறப் போகும் நமது மாவட்ட மாநாட்டிற்கு அகில இந்திய செயலர் வருகை தர இருக்கிறார். எனவே அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட சங்கம் செய்து வருகிறது என்ற தகவலையும் கூறினார். மாவட்ட மாநாட்டிற்கான நன்கொடையையும் வழக்கு நிதியையும் தோழர்கள் விரைவில் செலுத்த வேண்டும் என்று நினைவூட்டினார். பண்ருட்டி மற்றும் நெய்வேலி தோழர்களை உள்ளடக்கி தனியாக ஒரு பகுதியாக செயல்படுவதை பற்றி மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கலாம் என்று கூறினார். ஆள் பற்றாக்குறை இருந்த போதும் நமது பொது மேலாளர் அலுவலகத்தில் நமக்கு கிடைக்கும் சிறப்பான ஒத்துழைப்பினைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி கூறினார். 

நிறைவாக கடலூர் பகுதி பொருளாளர் தோழர்.R.நந்தகுமார் அவர்கள் மாவட்ட மாநாட்டு நன்கொடை, வழக்கு நிதி ஆகியவற்றை தோழர்கள் விரைவில் தர வேண்டும் என்ற வேண்டுகோளோடு அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.




No comments:

Post a Comment