Tuesday, 20 February 2024

சிதம்பரம் பகுதி 
மாதாந்திர கூட்டம்

18/11/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிதம்பரம் Temple exchange வளாகத்தில் பிப்ரவரி மாத மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் T விசுவலிங்கம் பகுதி தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கினார். பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G S குமார் அவர்கள் சென்ற கூட்டத்திற்கும் இந்த கூட்டத்திற்கும் இடையே ஆற்றிய பணிகளை தொகுத்து வழங்கினார். 

கடலூர் மாவட்ட சங்கத்திற்கு விழுப்புரம் பகுதி வலது கை என்றால் சிதம்பரம் பகுதி இடது கையாக பணியாற்றி மிகுந்த உறுதுணையாக உள்ளன. கடலூர் விழுப்புரம் சிதம்பரம் திண்டிவனம் விருத்தாச்சலம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கூட்டங்கள் நடைபெறுவதால் உறுப்பினர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்ப்பதற்கு உதவிகரமாக உள்ளது. 

தோழியர் ராஜகுமாரி தமிழ்மணி அவர்கள் வாழ்வின் அங்கமான திருமண நிகழ்வுகளின் சம்பிரதாயங்களையும் அவைகளில் உள்ள நுட்பமான கருத்துக்களையும் பட்டியலிட்டார். தோழியர் உஷா அவர்கள் நாம் சோர்வடையாமல் இருக்க மனதையும் உடம்பையும் சரியான முறையில் நிர்வாகித்தால்தான் முடியும் என்பதனையும், மனவளமும் உடல் வளமும் பெற சில செய்தி திரள்களை எடுத்துரைத்தார். 

தோழியர் கீதா ஜவகர் அவர்கள் தனது இரு பிள்ளைகளையும் மருத்துவர்கள் ஆக்கியதற்கு அவரது தன்னம்பிக்கையும் மற்றும் தன்னலமற்று செயல்படும் நமது சங்கமும் தான் காரணம் என்று எடுத்துரைத்தார். கல்வி ஒன்று மட்டுமே நமது சொந்த காலில் நிற்பதற்கு வாழ்நாள் முழுவதும் உதவிகரமாக இருக்கும் என்பதனையும் தெளிவு படுத்தினார். 

தோழர் இஸ்மாயில் மரைக்கார் தற்போதைய பகுதி நிர்வாகிகளின் செயல்பாடுகள் போற்றத் தக்க வகையில் இருப்பதினால் நடைபெற உள்ள பகுதி மாநாட்டில் அவர்களே தொடர வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கடந்த 40 வருடங்களாக ஓய்வூதியர்களின் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் நலன் காப்பதற்கு பாடுபட்டு வரும் அண்ணாச்சி ஜெயராமன் அவர்களின் பணி என்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். 

தோழர் ஜெயக்குமார் அவர்கள் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை என்று பல சங்கங்களின் உறுப்பினர்கள் நமது ஓய்வூதிய சங்கத்தில் சங்கமித்து இருப்பதால் ஒற்றுமை உணர்வோடு செயல்படுவதால் நமது சங்கம் ஒரு வலிமைமிக்க சங்கமாக வளர்ந்துள்ளது என்பதனை எளிய முறையில் எடுத்துரைத்தார். 

மாவட்டத் தலைவர் தோழர் K சந்திரமோகன் அவர்கள் ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு பற்றியும் அதனை உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத்தையும் எடுத்துரைத்தார். சபமாபானுக்கு ஓய்வூதியம் மாறிய பிறகு பலவித பிரச்சனைகள் எழுந்துள்ளதையும் ஒவ்வொரு ஓய்வூதியரும் login creation செய்து தங்களைப் பற்றிய தகவல்களையும் தங்களது இணையர் பெயர் அவர்களது பிறந்த தேதி போன்ற தகவல்கள் சரியாக உள்ளதா என்பதனை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறைகளையும் எடுத்து கூறினார். 

மாவட்டச் செயலாளர் தோழர் அசோகன் அவர்கள் மத்திய அரசுக்கு இணையாக ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதியம் தரப்பட வேண்டும் என்று நாம் கொடுத்த வழக்கின் வெற்றியின் காரணமாக தொலைபேசித் துறை அமைச்சரிடமும் நமது துறையைச் சார்ந்த அதிகாரிகளிடமும் சிறிது அசைவு காணப்படுவதை சுட்டி காட்டினார். சரியான திசை வழியில் நமது சங்கம் செல்வதனை எளிய முறையில் விளக்கினார். Sampann migration மாற்றத்துக்குப் பிறகு ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டள்ள பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைத்து வருவதனை விளக்கினார். உயிரோடு இருப்பவரை இறந்தவராகவும், இறந்தவரை உயிரோடு இருப்பதாகவும் போன்ற பிரச்சனைக்குரிய தகவல்கள் சம்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் இன்னும் உள்ள பல பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.

அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் 2018, 2022 ஆகிய காலகட்டங்களில் நாம் நடத்திய வீரம் சிறந்த போராட்டங்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு துறைகளின் அதிகாரிகளை ஏறத்தாழ நான்கு ஐந்து வருடங்கள் சந்தித்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லாத காரணத்தினால் தான் நாம் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழலை விளக்கினார். சிறப்பான ஒரு தீர்ப்பை பெற்று நாம் ஓய்வூதிய மாற்றம் பெறுவதற்கான முன்னெடுப்பை செய்துள்ளதை எடுத்துரைத்தார். 80 வயது முடிந்து பெற்ற முதல் மாத இருபது சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை ஆறு பகுதிகளுக்கும் மற்றும் மாவட்ட சங்கத்திற்கும் பிரித்து கொடுத்தது ஒரு நெகிழ்வான தருணமாகும். கங்கை கூட ஒரு நாள் வற்றும். ஆனால் அண்ணாச்சியின் ஓய்வூதியர்கள்பால் காட்டும் நேசமும் அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதில் காணும் அக்கறையும் என்றும் வற்றாது. பத்திற்கு மேற்பட்ட தோழியர்கள் உட்பட 80 தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது மாவட்ட சங்கத்திற்கு உற்சாகத்தை கொடுத்தது.



 

No comments:

Post a Comment