Tuesday, 13 February 2024

  கடலூர் பகுதியின் 

மாதாந்திர கூட்டம் 

10.02.2024 சனிக்கிழமை மதியம் 03:30 மணி அளவில் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பெருவாரியான உறுப்பினர்கள் பங்கேற்றனர். பகுதி செயலர் தோழர்.V. இளங்கோவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 

மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.N. அன்பழகன், தோழர். P.சிவக்குமாரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் அவர்கள் AIBSNLPWA ஆரம்பித்த பின்னர் நமது மிகப் பெரிய சாதனைகளை பட்டியலிட்டார். DOTயில் இருந்து BSNL உருவானபோது கவனிக்காமல் விட்ட பிரச்னைகளையும் நமது அமைப்பு சரி செய்தது என்ற நுணுக்கமான விபரத்தை பதிவு செய்தார். PAN-Aadhaar இணைப்பைப் பற்றி நாம் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் நமது உறுப்பினர்கள் சிலர் அலட்சியமாக இருந்ததன் விளைவைக் குறிப்பிட்டு எதிர்காலத்தில் இத்தகைய விஷயங்களில் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். CCATN அலுவலகத்தில் உள்ள தரவுகளில் சில பிழைகள் உள்ளதாகவும் உறுப்பினர்கள் தங்கள் தரவுகள் சரியாக உள்ளதை SAMPANN login செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். FMA மற்றும் CGHS refund விஷயங்களில் நமது தொடர்ந்த முயற்சிகளை எடுத்துரைத்தார். குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் தற்போதுள்ள தாமதத்தை நீக்குவதற்கு மாநில சங்கத்துடன் சேர்ந்து நாம் எடுக்கும் முயற்சிகளையும் எடுத்துக் கூறினார். அதாலத் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியதோடு மாவட்ட சங்க செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் திண்டிவனம் தோழர் விநாயகம் அவர்களையும் ஹாரூன் பாஷா அவர்களையும் பாராட்டினார். அகில இந்திய செய்திகளை பகிர்ந்து கொண்டு தனது உரையை நிறைவு செய்தார். 

தோழர்.V.நீலகண்டன் அவர்கள் வாழ்நாள் சான்றிதழ் புதுப்பிப்பதில் நமது தோழர்களின் சிறப்பான பங்கினை பாராட்டினார். மேலும் தமது துணைவியார் பணிபுரிந்த மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவரை மீண்டும் எழுப்புவதற்கு உதவிய தோழர்.P.சாந்தகுமார் மற்றும் நமது தோழர்களின் பங்களிப்பை பதிவு செய்தார். துயருற்ற தோழர்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் தோழர்.P. சாந்தகுமார் அவர்களின் மனப்பாங்கினை வெகுவாக பாராட்டினார். 

தோழர்.P.ஜெயராமன் AGS அவர்கள் தமது உரையில் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்த நிலையிலும் ஆரம்ப காலத்தில் தோழர்.கங்காதரராவ் போன்ற நமது தலைவர்கள் சந்தித்த அவமானங்களையும் மறந்துவிடக்கூடாது என்று பேசினார். கடலூரில் சங்கம் ஆரம்பிக்கும் பொழுது ஓய்வு பெற்ற தோழர்களுடன் அப்போது பணியில் இருந்த தோழர்கள் குறிப்பாக இன்றைய மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் போன்றோரின் உதவியையும் பங்களிப்பையும் பதிவு செய்தார். Provisional pension பற்றிய நுணுக்கங்களை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். பாரத்ரத்னா விருது வழங்கப்பட்ட மேனாள் பிரதமர் மறைந்த திரு.P.V.நரசிம்மராவ் அவர்களின் சிறப்பியல்புகளை நினைவு கூர்ந்தார். பிற மாவட்ட தோழர்களும் பிரச்சினைகளுக்காக நமது மாவட்டத்தை அணுகுவதை எடுத்துரைத்து தோழர்களும் தோழியர்களும் தன் மீது கொண்ட அன்பிற்காக நெகிழ்ச்சியோடு நன்றி கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

தமது பிறந்தநாளையொட்டி தோழர்.P.சாந்தகுமார் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு காரம் மற்றும் தேநீர் வழங்கினார். 

பொருளாளர் தோழர்.R.நந்தகுமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.




No comments:

Post a Comment