Monday, 15 January 2024

 


ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம்,

ஏழாவது ஊதியக்குழு நீதிமன்ற தீர்ப்பு வெற்றி உரை,

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

கடலூர்-10.01.2024

10.01.2024 அன்று M.V.P தண்டபாணி செட்டியார் கல்யாண மண்டபத்தில் மாவட்ட சங்கத்தின் சார்பாக ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம், ஏழாவது ஊதியக்குழு நீதிமன்ற தீர்ப்பு வெற்றி உரை, விரிவடைந்த மாவட்ட செயற்குழு ஆகிய நிகழ்வுகள்

விழுப்புரம் தோழர் ராஜு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது. தலைவர் K சந்திரமோகன் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன் அவர்கள் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தோழர் R.அசோகன் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில சங்க அமைப்புச் செயலாளர் தோழர் K. வீரராகவன் ஆலோசகர், தமிழ் மாநில சங்க ஆலோசகர் தோழர் V ராமாராவ் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் P. ஜெயராமன் அவர்கள் தோழர் நகரா வழக்கின் தீர்ப்புக்கு முன்பிருந்த ஓய்வூதிய முரண்பாடுகள் பற்றியும் தீர்ப்பிற்கு பிறகு ஓய்வூதியம் முறைப்படுத்தப்பட்டதையும் எடுத்துரைத்தார். குடும்ப ஓய்வூதியர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கடலூர் மாவட்ட சங்கம் எடுத்து வரும் முயற்சிகளை பட்டியலியிட்டார்.

அகில இந்திய சங்க தலைவர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மத்திய அரசின் பல துறைகளின் அதிகாரிகளையும் சந்தித்து நான்கு வருடங்கள் முயற்சித்தும் பலன் எதுவும் கிட்டாததாலும், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு பிரகலாத் ஜோசஷி வழியாக முன்னாள் இந்நாள் தொலைபேசித் துறை அமைச்சர்களை சந்தித்தும் பயனில்லாத நிலையில் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என்பதனை மத்திய செயற்குழுவில் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகியதையும், விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரசித்தி பெற்ற வழக்கறிஞரை நியமித்ததையும், வழக்கிற்கு தேவையான 50 ஆவணங்களையும் ஏறத்தாழ 300 பக்கம் உள்ள தரவுகளை தயாரித்து வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டதன்  காரணமாக  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றதையும், தீர்ப்பினை பெற்ற பிறகு மத்திய சங்கம் தொலைபேசி இலாக்கா செயலர் நீரஜ் மிட்டல், தொலைபேசித் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர்களை சந்தித்து நம் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்ததையும் ஏறத்தாழ  ஒன்றேகால் மணி நேரம் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

பின்னர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். மகளிர் தோழியர்கள் ஒன்று கூடி 81வது அகவையை எட்டிய அண்ணாச்சி P ஜெயராமன் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விரிவடைந்த மாவட்ட சங்க செயற்குழு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் 10.04.2023 முதல் 09.01.2024 வரையில் உள்ள காலகட்டத்திற்கு  மாவட்ட  சங்க செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். ஒரு சில திருத்தங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. எட்டாவது மாவட்ட மாநாட்டினை வருகின்ற மார்ச் மாத இறுதியில் அல்லது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு 10 தினங்களுக்குள் சூழ்நிலையை பொறுத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மெடிக்கல் பில்கள் வராத தோழர்களின் பிரச்சினைகளை ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். மாவட்டச் சங்கம் அதனை ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி செய்வதாக கூறியது.

இறுதியாக தோழர் ஹாஜா கமாலுதீன் மாவட்ட பொருளாளர் நன்றி கூற மாவட்ட செயற்குழு முடிவற்றது. திருத்தப்பட்ட மாவட்ட சங்க செயல்பாட்டு அறிக்கை, விரிவான தொகுப்புகளும் பின்னர் பதிவிடப்படும்.

R அசோகன்

மாவட்ட செயலாளர்

AIBSNLPWA Cuddalore.














No comments:

Post a Comment