திண்டிவனம் பகுதி
மாதாந்திர கூட்டம்
11.12.2023 அன்று தொலைபேசி நிலையவளாகத்தில் மிகவும் சிறப்பாக தோழர் J. தர்மலிங்கம் SDE அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 9 தோழியர்கள் மற்றும் 13 தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் மறைந்து தோழியர் J சொக்கம்மாள் அவர்களுக்கு அஞ்சலி உரையை கிளையின் வழிகாட்டி மூத்ததோழர். S. நாராயணசாமி அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். ஒரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் தோழர் D. திருவிக்கிரமன் அவர்கள் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் சாதனைகளை பற்றி பேசினார். தோழர் S. நடராஜன். SDE. அவர்கள் உடல் நலம் பேணுதல் பற்றி விளக்கவுரையாற்றினார் தோழர் Y.ஹாரூன்பாஷா JE அவர்கள் DLC யை காலத்தே முடித்திடவேண்டும் நமது கிளையில் சில தோழர்கள் மெத்தனமாக நடந்துகொள்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.
அகிலஇந்தியதுணைபொதுச்செயலாளர் தோழர் பாசமிகு அண்ணாச்சி அவர்கள் 7. வது ஊதியக்குழுவின் நீதி மன்ற தீர்ப்பை பற்றியும் நகாரா தீர்ப்பின் சாரம்சத்தை பற்றியும். CGHSன் நன்மைகள் அதன் பயன்கள் பற்றியும் அனைவரும் சேர்ந்து பயன்அடையும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தன் உரையை நிறைவு செய்தார்.
புதிய உறுப்பினராக தோழர் பத்ரிநாராயணன் TT அவர்களுக்கு அண்ணாச்சி அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.
இறுதியாக தோழர் K.புண்ணியகோட்டி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
.
No comments:
Post a Comment