கடலூர் மாதாந்திர கூட்டம் 09.12.2023
தோழர் B.கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பகுதிச் செயலர் தோழர்.V.இளங்கோவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்காலகட்டத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.N.அன்பழகன், தோழர்.K.சீனுவாசன், மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் P.சாந்தகுமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தோழர். M.தங்கவேலு அவர்கள் பேசிய பொழுது CGHSல் சிகிச்சைக்கு செல்லும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும், வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தி பேசினார். தோழர்.K.இளங்கோவன் அவர்கள் பேசும்போது CGHSல் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் பயன்பெற்ற தோழர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மாவட்ட தலைவர் தோழர்.K. சந்திரமோகன் அவர்கள் பேசும்போது Nodal Ministry சொல்வதை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்ற அமைச்சகத்தின் வாக்குறுதியை குறிப்பிட்டார். பென்ஷன் ரிவிஷன் 80% நமக்கு சாதகமாக உள்ளதை குறிப்பிட்டு நம்பிக்கையூட்டினார்.
மாநில உதவி தலைவர் தோழர்.N.திருஞானம் அவர்கள் பேசும்போது நமது மாவ நமது சொசைட்டியில் நடந்த நிகழ்வுகளையும் சமீபத்தில் கேரளாவில் இதுபோன்று சொசைட்டியில் நடந்த ஊழலையும் ஒப்பிட்டு பேசினார்.
மாவட்ட செயலர் தோழர் R.அசோகன் அவர்கள் பேசிய போது அதாலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு தீர்வுக்கு காத்திருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் மீது நமது நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார். CCATN அலுவலகம் சமீபத்தில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் இயங்காமல் இருப்பதை குறிப்பிட்டு அதனால் பிரச்சனைகள் மேலும் தாமதமாவதையும் குறிப்பிட்டார். சொசைட்டி பிரச்சனையில் குறைந்தபட்சம் இறந்த உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய தொகையை மட்டுமாவது கொடுப்பதற்கு மாநில செயலர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்களும் மூத்த தோழர் சுகுமாரன் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதை குறிப்பிட்டார். இது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைக்குமாறு கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த உதவி செய்யுமாறு DOTஐ தலைவர்கள் அணுகி இருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் பென்ஷனர் தினத்தை அகில இந்திய தலைவர் தோழர்.DG அவர்களின் பங்கேற்போடு மாவட்ட சங்கத்தின் சார்பில் நடத்த இருப்பதையும் குறிப்பிட்டார். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர்.P.ஜெயராமன் அவர்கள் பேசும்போது வாழ்நாள் சான்றிதழ் கொடுப்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் Face Identification Applicationஐ பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். பென்ஷன் ரிவிஷனுக்காக நீதிமன்ற வழக்கிற்கு முன்பு 2013 முதல் 2020 வரை நாம் மேற்கொண்ட முயற்சிகளை கூறினார். தீர்ப்புக்குப் பிறகு நமது தலைவர்கள் புதுடெல்லியில் நான்கு ஐந்து முறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தைகளையும் கூறினார். CGHS நடைமுறைகள் பல்வேறு காலகட்டங்களில் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் Non empanelled மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொண்டால் CGHSஆல் அங்கீகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும். 80 வயதைக் கடந்த பென்ஷனர்களுக்கு உரிய நேரத்தில் கூடுதல் பென்ஷன் பெறுவதற்கு நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்திற்கு தோழர். விஸ்வநாதன் அவர்கள் தேநீர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கினார். அவருக்கு நமது நன்றி. மேலும் தமது பிறந்தநாளை நம்முடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற மூத்த தோழியர் ராஜேஸ்வரி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர் நலமுடன் பல்லாண்டு வாழ அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தோம். பிறந்தநாள் கேக் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
பொருளாளர் தோழர்.R. நந்தகுமார் அவர்கள் முறையாக நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment