கடலூர் பகுதி
மாதாந்திர கூட்டம் 9.9.2023
09.09.2023 மாலை 3:30 மணி அளவில் கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம் தோழர்.B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் தோழர்.G.அசோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இக்காலகட்டத்தில் மறைந்தோர் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட தலைவர் தோழர்.K.சந்திரமோகன் அவர்கள் மாவட்ட சங்கத்தின் சார்பில் கடலூரில் 26.08.2023 அன்று சிறப்பாக நடைபெற்ற அமைப்பு தின கூட்டத்தினை நினைவு கூர்ந்து அதன் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நமது பென்ஷன் கணக்குகள் CCATN அலுவலகத்தில் பராமரிக்கப்படும் நிலையில் நாம் வருமான வரி குறித்து செலுத்த வேண்டிய கூடுதல் கவனத்தை வலியுறுத்தினார். மேலும் CGHS பற்றிய சில விளக்கங்களையும் கொடுத்தார்.
பின்னர் பேசிய மாநில உதவி தலைவர் தோழர்.N.திருஞானம் அவர்கள் நம்முடைய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அமைப்பு தின கூட்டங்களைப் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். மேலும் பிற மாவட்டத்தில் உள்ள தோழர்கள் கூட நமது மாவட்டத்தில் தங்களை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கும் அளவிற்கு நமது மாவட்ட சங்க செயல்பாடு உள்ளதை குறிப்பிட்டு பாராட்டினார்.
மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் அவர்கள் பேசுகையில் நம்முடைய மாவட்டத்தில் சமீபத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற அதாலத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கூட்ட நிகழ்வு முறையையும் நமது அணுகுமுறையையும் விருந்தோம்பலையும் அதிகாரிகள் மனம் திறந்து பாராட்டியதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மாநில நிர்வாகத்தின் சார்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற மெடிக்கல் அதாலத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இரண்டு கூட்டங்களிலும் தீர வேண்டிய பிரச்சனைகள் குறித்து நமது follow-up பற்றியும் தெரிவித்தார். சென்னை ஹாரூன் பாஷா, ராம்குமார், திண்டிவனம் விநாயகம் ஆகியோரின் பங்களிப்பை பாராட்டிப் பதிவு செய்தார்.
இன்றைய கூட்டத்திற்கு கடலூர் பகுதி உறுப்பினர் தோழியர். ராஜேஸ்வரி SDE அவர்கள் தாம் கைப்பட தயாரித்த சுவையான இனிப்பு மற்றும் கார வகைகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி.
நிறைவாக உரையாற்றிய தோழர்.P.ஜெயராமன் AGS அவர்கள் பென்ஷன் வழக்கின் போது நாம் சந்தித்த சவால்களையும் சுவாரஸ்யமான சில நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். நமது உறுப்பினர்கள் கேட்காமலேயே தாராளமாக நமது சங்கத்துக்கு அளிக்கும் நன்கொடைகளைப் பற்றி குறிப்பிட்டார். மேலும் தோழர்.V.S.ரவி AGM அவர்கள் நமது சங்கத்திற்கு பென்ஷன் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தை பரிசளித்ததையும் பதிவு செய்தார். இது நமது செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம். கடந்த காலங்களில் நடைபெற்ற அதாலத் கூட்டங்களைப் போல் அல்லாமல் சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டம் சுமூகமாக நடைபெற்றது திருப்தியளிப்பதாக கூறினார். மேலும் தாம் கலந்து கொண்ட கூட்ட நிகழ்வுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சில நேரங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக கடலூர் பகுதி அமைப்பு செயலர் தோழர்.E.விநாயகமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment