Tuesday, 11 April 2023

 கடலூர் பகுதி

மாதாந்திர கூட்டம்

08.04.2022 இரண்டாம் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் கடலூர் தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பகுதி தலைவர் தோழர்.B.கந்தசாமி அவர்கள் தலைமையேற்றார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக முதுபெரும் தொழிற்சங்க தலைவரும் மாநில செயலர் உட்பட பல பொறுப்புகளை ஏற்று திறம்பட NFTE லைன்ஸ்டாஃப் சங்கத்தை வழி நடத்தியவருமான தோழர். N.S.பாண்டுரங்கன் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அவரது திருஉருவ படத்திற்கு தலைவர்கள், தோழர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தோழர்.NSPயுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் தமிழ் மாநில NFTE லைன்ஸ்டாஃப் மாநில செயலர் தோழர் S. தமிழ்மணி அவர்களின் அனுபவங்களையும் அவர் அளித்த குறிப்புகளையும் கொண்டு உரையாற்றிய தோழர். V.லோகநாதன் அவர்களின் அருமையான புகழஞ்சலி உரைக்குப் பின்னர் நமது மூத்த தோழர் சாந்தகுமார் அவர்கள் தோழர் என் எஸ் பி உடனான தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மேலும் 08.04.2023 தோழர் ஓம் பிரகாஷ் குப்தா அவர்களின் 101வது பிறந்த நாளாகவும் அமைந்ததால் அவரைப் பற்றிய குறிப்புகளுடன் கூடிய பாராட்டுரையையும் நிகழ்த்தினார். மேலும் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றிய ஆயிரக்கணக்கான மஸ்தூர்கள் மற்றும் R T P க்கள் பணி நிரந்தரம் பெற தோழர் குப்தா அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்கிய போதே ஓய்வூதியத்தை உறுதி செய்ததையும் குறிப்பிட்டு பாராட்டினார். பின்னர் மேனாள் மாநில துணைத்தலைவர் தோழர்.K. சந்திரமோகன் அவர்கள் CGHS, Income tax பற்றிய விளக்கங்களை அளித்தார். தோழர் K.சீனிவாசன் அவர்கள் கவிதை வடிவில் தனது புகழுரையை வழங்கியதோடு திங்கட்கிழமை நடைபெற இருக்கும் மாவட்ட செயற்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் அவர்கள் நம்முடைய மாவட்ட சங்கத்தின் சார்பில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் தீர்வுக்காக காத்திருக்கும் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு விரிவாக பேசினார். மேலும் மாவட்ட சங்கத்துக்கு உதவிகரமாக இருக்கின்ற தன்னார்வலர்கள் தோழர். விநாயகம் அவர்களையும் சென்னை தோழர் ஹாரூன் பாஷா அவர்களையும் பாராட்டினார். நம்முடைய கூட்டங்கள், போராட்டங்கள் இவை எல்லாம் நடைபெறும் போது பேனர் தயார் செய்தல், ஒட்டுதல், தேவையான இடத்தில் அவைகளை அமைத்தல், சமயத்தில் மைக் செட், ஸ்பீக்கர் ஏற்பாடு செய்தல், அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் போன்ற செயல்பாடுகளில் தன்னலம் கருதாது அர்ப்பணிப்போடு ஈடுபட்டு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தோழர். M.S.குமார் அவர்களை கதராடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து பேசிய அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர். P.ஜெயராமன் அவர்கள் நூற்றாண்டு நாயகனும் தமது தந்தைமான தோழர் N.S.பாண்டுரங்கன் அவர்களின் தொழிற்சங்க சேவைகளை நினைவு கூர்ந்தார். மேலும் இலாகா ஊழியராக சக ஊழியரோடும் தொழிற்சங்க வாதியாக சக தோழர்களுடனும் குடும்பத் தலைவனாக குடும்ப உறுப்பினர்களுடனும் சிறந்த முறையில் பழகியதை நெகிழ்ச்சியோடு எடுத்துரைத்தார். ஏழாவது ஊதிய கமிஷனின் அடிப்படையில் பென்ஷன் என்ற நமது கோரிக்கையின் நியாயத்தையும் அதன் தற்போதைய நிலையை குறித்தும் விரிவாக பேசினார். விவரம் தெரியாத குடும்ப ஓய்வூதியர்களை அனுகி அவர்களுக்கு தேவையானவற்றை நாம் தான் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறியதோடு அதில் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். முத்தாய்ப்பாக தமது தந்தையாரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி நமது கடலூர் பகுதிக்கு பத்தாயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். தோழர். P.ஜெயராமன் அவர்களுக்கு கடலூர் பகுதியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த பின், பகுதியின் பொருளாளர் தோழர் R.நந்தகுமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.













No comments:

Post a Comment