விருத்தாசலம் பகுதியின் சார்பில் நடைபெற்ற தோழர் P.ஜெயராமன் அவர்களுக்கு
பாராட்டு விழா
22/01/2023 அன்று பக்தவச்சலம் அனுசுயா திருமண மண்டபத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயராமன் அவர்கள் அகில இந்திய உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விருத்தாச்சலம் தோழர்களால் நடத்தப்பட்ட பாராட்டு விழா நெகிழ்ச்சிகரமாக இருந்தது. அண்ணாச்சியால் வார்த்தெடுக்கப்பட்ட அவர்பால் அன்பு கொண்ட எளிய மனிதர்கள் பகிர்ந்து கொண்ட இனிய ஞாபகங்கள் ஒரு உணர்ச்சி குவியலாய் இருந்தது.
பாராட்டு கூட்டத்திற்கு தோழர் M ஞானசேகரன் retired DGM அவர்கள் தலைமை வகித்தார். விருத்தாசலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் R.ராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தோழர் R.அசோகன் அவர்கள் துவக்கக உரையாற்றினார். பின்னர் தோழர்கள் பெண்ணாடம் முத்துசாமி, விருத்தாச்சலம் அன்பழகன், பூவனூர் விமலா உள்ளிட்ட பல தோழர்கள் அண்ணாச்சியிடம் தாங்கள் வைத்திருக்கும் அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்தியதோடு அவர் அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்ததையும் நினைவுகூர்ந்தனர். மூத்த தோழர் P.வேலாயுதம் அவர்கள் "ஜெயராமன் இன்குலாப்" என்று கூறுவதில் தான் பெருமை அடைவதாக கூறினார். தோழர் கமாலுதீன் retired DGM அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். தோழர் மணிபாலன் அவர்கள் கவிதை மொழியில் அண்ணாச்சியை வாழ்த்தினார் தோழர் பகத்சிங் திருக்குறள் உரை நூல் அண்ணாச்சிக்கு நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் மாவட்ட உதவி செயலர்கள் தோழர் A.ஜெயக்குமார், தோழர் K.சந்திரமோகன், மாவட்டத் துணைத் தலைவர் தோழர் K.வெங்கட்ரமணன், மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.லோகநாதன் மாநில துணைத்தலைவர் தோழர் N.திருஞானம் ஆகியோர்கள் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர், மற்றும் தோழர்கள் விருத்தாச்சலம் மூத்த தோழர் அருள் லாரன்ஸ், கிருஷ்ணமூர்த்தி, C.நல்லதம்பி, தண்டபாணி, A.சுப்ரமணியன் திட்டக்குடி ஆகியோர்களும் தங்களுடைய இனிய நினைவுகளை அண்ணாச்சியோடு பகிர்ந்து கொண்டனர். இறுதியாக நமது மாவட்ட தலைவரும், அகில இந்திய உதவி பொதுச் செயலாளருமான தோழர் ஜெயராமன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். உளுந்தூர்பேட்டை தோழர் ஜெகநாதன் ADS அவர்கள் நன்றி கூறினார். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நெகிழ்வான நிகழ்ச்சியை விருத்தாசலத்தில் பார்த்ததில் மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது. ஒன்றை ஒன்று போட்டியிட்டு ஒவ்வொரு பகுதியும் இந்த பாராட்டு விழா கூட்டத்தினை நடத்திய போதிலும் ஒரு சிறிய பகுதியான விருத்தாச்சலம் ஒரு படி மேல் சென்றது பாராட்டுக்குரிய ஒரு விஷயமாகும். இந்தப் பாராட்டு கூட்டத்தினால் பல தகவல்களை அந்தந்த பகுதி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தன. தோழர் ராமலிங்கம் மற்றும் அவரது குழுவிற்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய பாராட்டு கூட்டத்தினால் எந்த வித போராட்டத் தயாரிப்பும் இன்றி இரண்டு கட்டப் போராட்டங்களிலும் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கும் அவர்கள் உத்வேகம் அடைவதற்கும் பேருதவியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. விருத்தாச்சலம் பகுதியில் சேர்ந்த ஏறத்தாழ 65 உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தது மாவட்ட சங்கத்திற்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உற்சாகம் என்றும் தொடர விருத்தாசலம் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
R.அசோகன்
மாவட்ட செயலாளர்
AIBSNLPWA CUDDALORE.
No comments:
Post a Comment