தோழமைக்குரிய மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தினை வெற்றி பெற செய்த அனைவரையும் மாவட்ட சங்கம் இருகரம் கூப்பி வணங்குகிறது. ஒரு சங்கத்தின் ஆதாரமே உணர்வுபூர்வமாக போராட்ட குணத்தோடு ஈடுபாடு காட்டும் உறுப்பினர்களே காரணம். ஒவ்வொரு நாளும் 150 க்கு மேல் உறுப்பினர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரிய ஒரு விஷயம். ஒரு சங்கம் வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடிப்படை உறுப்பினர்கள் சங்க அறைகூவலை ஏற்று அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு போராடும் அவர்களது போர்க்குணமே காரணம். எதிர்வரும் போராட்டங்களிலும் உறுப்பினர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நமது இலக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 32% பிட்மன்ட் ஃபார்முலாவில் ஓய்வூதிய மாற்றம் கண்டிடுவோம். கடந்த நான்கு நாட்களாக தர்ணாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய தோழர்கள் V.இளங்கோவன், R.நந்தகுமார், B.கந்தசாமி ஆகியோர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தோழர்கள் A.விஸ்வநாதன், M.ராஜவேல், A.R.கலியமூர்த்தி, M.தங்கவேலு V.ராஜு, N.ஜெயராமன், E.வினாயகமூர்த்தி ஆகியோர்களுக்கும் மாவட்டத்தின் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு நாட்களுக்கும் டீ மற்றும் மதிய உணவு ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தோழர் P.சாந்தகுமார் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மைக் செட் கொடுத்து உதவிய NFTE- BSNL சங்கத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமது மாவட்ட சங்கத்திற்கும் CCATN அலுவலகத்திற்கும் பாலமாக விளங்கும் தோழர் ஹாரூண் பாஷா சென்னையில் இருந்து வந்து நமது தர்ணாவில் கலந்து கொண்டது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
போராட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றியை கூறுவது மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களிலும் இது போன்று ஒத்துழைப்பை நல்கி நம்முடைய உரிமைகளை பெறுவோம். ஒருங்கிணைத்த மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
போராடுவோம்!! வெற்றி பெறுவோம் !!
தோழமையுடன்,
R
அசோகன்
மாவட்டச் செயலாளர்
AIBSNLPWA
CUDDALORE.



No comments:
Post a Comment