Thursday, 5 January 2023

திண்டிவனம் பகுதியின் ஓய்வூதியர் தினம்

மற்றும்

அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்

தோழர் ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு விழா

4/1/2023 அன்று சுபம் கல்யாண் AC ஹாலில் திண்டிவனம் பகுதியின் ஓய்வூதியர் தினமும் மற்றும் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

அகில இந்திய துணைத் தலைவர் தோழர் K.முத்தியாலு அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நகரா அவர்களின் நீதிமன்ற முயற்சியால் இன்று வரை அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைத்து வருவதையும் அந்தத் தீர்ப்பின் சிறப்பம்சங்களையும் பட்டியலிட்டார். தொலைபேசி துறையில் இருந்து நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் பொழுது தோழர்கள் O.P.குப்தா, வள்ளிநாயகம் மற்றும் BTEF சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆகியவர்கள் திறம்பட பணியாற்றி ஓய்வூதியூதியத்தை உறுதி செய்ததை நினைவு கூர்ந்தார். பொது விவாகரங்களிலும் ஓய்வூதியர்கள் ஈடுபடுத்திக் கொண்டு தேச நலன் காப்பதிலும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவதிலும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தோழர் ஜெயராமன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். தோழர் R.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பகுதி ஒருங்கிணைப்பாளர் திருவிக்ரமன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தோழர் நடராஜன் retired SDE அவர்கள் துவக்க உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கடலூரில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர் K.சமுத்திர வேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தோழர் புண்ணியகோடி நன்றி உரை ஆற்றினார். இனிய மதிய உணவுடன் விழா நிறைவு பெற்றது.

R.அசோகன்

மாவட்ட செயலாளர்

 


No comments:

Post a Comment