Wednesday, 7 December 2022

 கடலூர் பகுதி செயற்குழு

AIBSNLPWA கடலூர் பகுதியின் செயற்குழு கூட்டம் இன்று (07.12.2022) காலை 11.00 மணியளவில் நமது சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தோழர் B.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் V.இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகி  தோழர் N.திருஞானம், மாவட்டத் தலைவர் தோழர் P.ஜெயராமன், மாவட்டச் செயலாளர் தோழர் R.அசோகன் மற்றும் மூத்த உறுப்பினர்கள், ஆர்வமுள்ள தோழர்கள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: 

1. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய உதவிப் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நமது மாவட்டத் தலைவர் தோழர் P.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு விழாவையும் ஓய்வூதியர் தினத்தையும் இணைத்து நமது பகுதியின் சார்பில் மிகச் சிறப்பாக நடத்துவது எனவும்,

2. மாநிலச் செயலரின் பங்கேற்போடு அவர் பங்குகொள்ள சம்மதிக்கும் தேதியில் விழாவினை நடத்துவது எனவும்,

3. விழா நடத்துவதற்கான செலவினங்களுக்காக உறுப்பினர்களிடம் நன்கொடை திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பாராட்டு விழா நிகழ்வு முறைகளை தலைவர், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகியோர் மாவட்ட செயலர்  மற்றும் மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டுதலோடு முடிவு செய்ய செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

கடலூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான "ஆரஞ்சு அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் வரும் இரண்டாவது சனிக்கிழமை  மாதாந்திரக் கூட்டத்தினை ரத்து செய்திடவும் செயற்குழுவில் முடிவெடுக்கபட்டது.

முத்தாய்ப்பாக மாவட்டத்தலைவர் தோழர் P. ஜெயராமன், மாவட்டச் செயலர் தோழர் R.அசோகன் ஆகியோர் அகில இந்திய மாநாடு, பென்ஷன் ரிவிஷன்,  மாவட்ட அளவிலான பிரச்னைகள், எதிர் வரும் போராட்டங்கள் பற்றி உரையாற்றினர். 

பகுதிப் பொருளாளர் தோழர் R.நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. 

நிகழ்வின் போது தோழர்கள்  NT, KVR, K.நாராயணன், S.உத்திராபதி ஆகியோர் மாவட்டத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். 

மாவட்டச் சங்கம் 


No comments:

Post a Comment