திருமதி. B கிரிஜா குடும்ப ஓய்வூதியர் நெய்வேலி அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 10%DCRG தொகையை அவரது வங்கியில் வரவு வைக்க No due certificate மாவட்ட நிர்வாகத்தால் CCATN அலுவலகத்திற்கு 23/11/2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தத் தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
திரு. D பாலாஜி JE NTS அவர்களுக்கு டெலிகாம் குடியிருப்பில் இருந்துதான் காரணமாகவும் நிலுவைத் தொகை இருந்ததாலும் அவருக்கு 8% Ex-gratia தொகை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. JTO(civil) அவர்கள் No due certificateஐ கணக்கு அதிகாரி அவர்களுக்கு அனுப்பியுள்ளதால் நவம்பர் மாதம் சம்பள பட்டியலில் அவருக்கு 8% Ex-gratio தொகையும் மற்றும் CGHS refund தொகையும் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.
திருமதி ஜெயகாந்தம் குடும்ப ஓய்வூதியர் w/o ராமச்சந்திரன் LI TNV அவர்களுக்கு 80 வயது முடிந்ததன் காரணமாக வரவேண்டிய கூடுதல் பென்ஷன் வரவு வைக்கப்படாமல் இருந்தது.மாவட்ட தலைவர் தோழர். P ஜெயராமன், மாநிலத் துணைத் தலைவர் தோழர் N திருஞானம், தோழர் விநாயகம் திண்டிவனம் மற்றும் ஹாரூன் பாஷா சென்னை ஆகியோர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்பட்டு தோழியர் அவர்களுக்கு ரூபாய் 97 ஆயிரம் நிலுவைத் தொகையை பெற்றுத் தந்துள்ளோம். மேலும் அவருக்கு மாதம் 3000 பென்ஷன் தொகை உயர்ந்துள்ளது. ஒன்றுபட்ட எந்த முயற்சியும் தோல்வி அடைவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
Fixed Medical Allowance (₹1000) வேண்டி நம்முடைய 18 உறுப்பினர்கள் CCATN அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியர்களுக்கு FMA போடப்பட்டு வருகிறது. இதற்கு வழி வகுத்த திருமதி கெளதமி பாலஸ்ரீ joint CCA (pension) அவர்கள் மூன்று மாத பயிற்சிக்கு சென்று இருப்பதால் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பணிக்கு வருகிறார். அதன் பிறகு இந்த தேக்க நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
குடும்ப ஓய்வூதிய பிரச்சனைகளை பார்த்து வந்த கணக்கு அதிகாரி அவர்கள் ஓய்வு பெற்றாலும் புதிதாக பொறுப்பேற்ற கணக்கு அதிகாரி அவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக விடுப்பில் இருப்பதாலும் திருமதி நித்தில வள்ளி,, மலர்க்கொடி, பத்மபிரியா ஆகியோர்களது குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் திரு மாரிமுத்து வெற்றி ஆகியவர்களது குடும்ப ஓய்வூதிய பிரச்சனையும் தீர்க்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அகில இந்திய மாநாட்டிற்கு பிறகு மேற்கொண்டு நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுக்க வேண்டும். மேற்கண்ட தோழர்கள் தோழியர்களையும் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
பிப்ரவரி மாதம் முதல் பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு GSLI தொகையானது அவரவர் வங்கிக் கணக்கில் இன்னும் வரவு வைக்கப்படவில்லை. திரு மதுரை துணைப் பொது மேலாளர்(ஓய்வு) அவர்களின் கடும் முயற்சியால் இந்தத் தொகையானது இந்த மாத இறுதியில் வரவு வைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கள்ளக்குறிச்சியில் டிவிஷனல் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு அய்யாசாமி DOT Pensioner அவர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகள் படி ஓய்வூதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பதை நமது மாவட்ட தலைவர் கண்டுபிடித்து உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு தோழர் சுந்தர கிருஷ்ணன் மாநிலச் செயலாளர் மற்றும் தோழர் ராம்குமார் சென்னை ஆகியோர்களது ஒத்துழைப்புடன் இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்பட்டது. கணிசமான ஒரு தொகை நிலுவையாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்பொழுது அவர் கூடுதலாக ரூபாய் 10,000 ஓய்வூதியமாக பெறுகிறார்.
தோழர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு NEPP உத்தரவுபடி ஓய்வூதிய மாற்றம் செய்வதற்கான பணி முடியும் தருவாயில் உள்ளது. தோழர் K மனோகரன் NTS அவர்கள் NEPP உத்தரவுப்படி ஓய்வூதிய மாற்றம் செய்யப்படவில்லை என்று ஆறு வருடங்கள் கழித்து மாவட்ட சங்கத்தை அணுகி உள்ளார். NEPP order படி செய்யப்பட்ட pay revision ஆணையானது CCATN அலுவலகத்திற்கு அனுப்பப்படாததால் அவருக்கு ஓய்வூதியம் மாற்றம் செய்யப்படவில்லை. மாவட்டச் சங்கம் நிர்வாக பிரிவு ,கணக்கு பிரிவு அதிகாரிகளை அன்றாடம் சந்தித்து பேசி வருகிறார். அவருடைய service book இருந்தால் தான் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். கடலூர் நிர்வாகம் CCATN நிர்வாகத்திடம் service bookஐ பெறுவதற்காக கடிதம் எழுத இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த பிரச்சனை தீர்வதற்கு சிறிது காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது
திரு. A R கலியமூர்த்தி அவர்களுக்கு commutation amount இன்னும் அவரது வங்கி கணக்கில் வர வைக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் மூன்றாவது நினைவூட்டல் கடிதத்தை இமெயில் மூலமாக அனுப்பி உள்ளார். அவருக்கு NEPP படி ஓய்வூதிய மாற்றம் மற்றும் DCRG நிலுவைத் தொகை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது.
அகில இந்திய மாநாட்டிற்கான பணிகளை ஆந்திர மாநில தோழர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். மாநாட்டிற்கு வருகின்ற தோழர்கள் MRS card அல்லது CGHS beneficiary card, AADHAAR card , Pensioner ID card ஆகியவற்றை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 30/11/2022 அன்று சரியாக 11 மணியளவில் விழுப்புரம் ஜங்ஷனில் இருக்கும்படி மாநாட்டிற்கு வரும் தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூதியர்கள் ஒற்றுமை ஓங்குக !!!வெல்லட்டும் அகில இந்திய மாநாடு!!! AIBSNLPWA ZINDHABAD!!!
Thursday, 24 November 2022
செய்தி துளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment