Sunday, 11 December 2022

விருதை பகுதி ஓய்வூதியர் நலச் சங்கத்தின் எட்டாவது மாதாந்திர கூட்டம்

11.12.2022 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் பகுதி செயலாளர் ரா.ராமலிங்கம் வரவேற்புரையாற்றிட தலைவர் ஞானசேகரன் அவர்கள் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அடுத்து மறைந்த தோழர். V.சுந்தர்ராஜன், விருதை, தோழர். R.கலியமூர்த்தி அவர்களின் தாயார் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பகுதி செயலாளர் ரா.ராமலிங்கம் துவக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள் N.திருஞானம் மாநிலத் துணை தலைவர், ஹாஜாகமாலுதீன், மாவட்டப் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் பா.ஜெயராமன் அவர்கள் அ.இ.துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தைப் பாராட்டி தோழர்கள் V.நல்லதம்பி, D.மோகன்ராஜ், S.அன்பழகன், திட்டக்குடி முருகன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து N.T. அவர்கள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகளை எடுத்துக்கூறினார். விருதை பகுதி பொறுப்பாளர்  KVR அவர்கள் தோழர் ஜெயராமன் ஆற்றிய பணிகளை பாராட்டிப் பேசி  இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை விளக்கினார். இறுதியாக தோழர். ஜெயராமன் அ.இ.து.பொதுச்செயலாளர் "one increment  78.2%, pension அனுமதி பெற்ற விபரங்கள், 7th CPC Fitment  போன்ற எண்ணற்ற விசயங்களை புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார். CGHSல் சேர்வதினால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினார்.

விருதை தோழர். K.கணேசன் CGHS தான் சேர்ந்து பெற்ற பயன்களை அனுபவங்களை பற்றி விளக்கினார். 

இறுதியாக பெண்ணாடம் தோழர். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.









No comments:

Post a Comment