Sunday, 4 September 2022

தோழர்களே வணக்கம்!

நமது மத்திய, மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்றவர்களின் மருத்துவபில்கள், மெடிக்கல் அலவன்ஸ் ஆகியவைகளுக்கான நிதி மத்திய நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022 வரையிலான அனைத்து மெடிக்கல் பில்கள், மெடிக்கல் அலவன்ஸ் (FMA) பட்டுவாடா செய்யப்பட உள்ளது. பலரது வங்கி கணக்கு எண் சரியில்லாத காரணத்தினால் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்ட மருத்துவ பில்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. நமது மாவட்ட சங்கத்தின் பெரும் முயற்சியின் காரணமாக நமது பென்சனர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை இணைக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து சரி பார்த்துக் கொள்ளவும். 

 ஏதேனும் தவறு இருப்பின் உடன் மாவட்ட சங்கத்திடம் தெரியப்படுத்தவும். *வங்கிக் கணக்கில் தவறு இருப்பின் தங்களது மெடிக்கல் பில் தொகை சரியான வங்கி கணக்கு விபரம் இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டு விடும். அதனை மீண்டும் பெறுவதற்கு மிகவும் தாமதமாகும். 

இதில் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். தங்களது ஒத்துழைப்பு இருந்தால் தான் இதனை உடனடியாக சரி செய்து நமது மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க முடியும்.

இந்த பென்ஷன் தாரர்களின் வங்கி விவரங்கள் ஏற்கனவே மெடிக்கல் பில், அலவன்ஸ் நிலுவையில் உள்ளவர்களின் பட்டியல் மட்டுமே. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை ஒருங்கிணைப்பாளர்கள், கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க உதவிடும்படிகேட்டுக்கொள்கிறோம்.

பட்டியல் காண கீழே கிளிக் செய்யவும்.

மாவட்ட சங்கம்

வங்கிக் கணக்கு விபர பட்டியல்



No comments:

Post a Comment