Monday, 1 August 2022

செய்தித்துளிகள்

 செய்தித்துளிகள்

1. ஜூலை மாத சம்பளப் பட்டியலில் 22 ஓய்வூதியர்களுக்கு CGHS refund 

தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


2.29/07/2022 அன்று AIBSNLPWA  STR Chennai சங்கத்தின் மாவட்ட மாநாடு ஜீவன ஜோதி மஹாலில் நடைபெற்றது அதில் மாவட்ட செயலாளர் R அசோகன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாநாட்டில் டாக்டர் K ஜெகதீசன், Nodal officer CGHS Chennai அவர்கள் கலந்துகொண்டு பேசினார் . அவரோடு நடந்த கலந்துரையாடலில் Pondicherry  wellness centre பிரிவில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை நிலவுவதை மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார். அதற்கு அவர் இது சம்பந்தமான டெண்டர் நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும் இனி வரும் காலங்களில் இப் பிரச்சனை வராது என்று பதிலுரைத்தார்.  கடலூரில் உள்ள ஓய்வூதியர்கள் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் PIMS மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று மிகுந்த சிரமத்திற்கு இடையே மருத்துவ வசதி பெறவேண்டியுள்ளது என்பதனை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். கடலூர் அருகே உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை EMPANELLED HOSPITAL ஆக சேர்த்தால் கடலூர் பகுதியில் உள்ள ஓய்வூதியர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். நமது மாவட்ட சங்கம் இது சம்பந்தமாக  அனுப்பிய கடிதம் வந்திருப்பதாகவும் உரிய நேரத்தில் பரிசீலிபபதாகவும் டாக்டர் ஜெகதீசன் அவர்கள் கூறினார். PONDICHERRY WELLNESS CENTRE ஊழியர்களும் அதிகாரிகளும் மிகுந்த கனிவோடு சேவை செய்வதற்கு நமது நன்றியை தெரிவித்தோம். 


3. மாவட்டச் செயலாளர் , தோழர் ஹாரூன் பாஷா மற்றும் தோழர் ராம்குமார் ஆகியவர்கள் 29/07/2022 அன்று CCATN  அலுவலகம் சென்று பல தோழர்களுக்கு மேப்பிங் சர்டிபிகேட் வராதது பற்றியும் திருமதி ஜோதி அவர்களின் பென்ஷன் பற்றியும் மற்றும் மறைந்த குடும்ப ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு வழங்கவேண்டிய குடும்ப ஓய்வூதியம் மிகுந்த காலதாமதம் ஆகியும் தரப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்டினோம். ஆனால் எந்த பெரிய அதிகாரியும் இல்லாததால் PRM அவர்களிடம் அனைத்து பிரச்சனைகளையும் கொடுத்துவிட்டு வந்தோம் .அடுத்த வாரத்தில் மேப்பிங் சர்டிபிகேட் வராத தோழர்களுக்கு எடுத்து வைப்பதாகும் கூறியுள்ளார். மற்ற பிரச்சினைகளை அதிகாரிகளிடம் பேசும்படி கூறினார்.



No comments:

Post a Comment