Sunday, 14 August 2022

 கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம்

இன்று மாலை 3 மணியளவில் கடலூர் CSC வளாகத்தில் பகுதியின் துணைத் தலைவர் T.ராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பகுதியின் துணை ஒருங்கிணைப்பாளர் தோழர் V.இளங்கோவன் வரவேற்புரை நல்கினார். சேலத்தில் நடைபெற்ற ஏழாவது மாநில மாநாட்டில் கடலூர் பகுதியைச் சேர்ந்த தோழர் N.திருஞானம் மாநில துணைத்தலைவராகவும், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தோழர் K.வீரராகவன் அவர்கள் மாநில அமைப்பு செயலாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை இன்று நடைபெற்ற பகுதி மாதாந்திர கூட்டத்தில்  தோழர்கள் மேனாள் மாநில துணைத்தலைவர் தோழர் C.சந்திரமோகன், மாவட்டத் தலைவர் தோழர் P.ஜெயராமன், மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் K.இளங்கோவன் ஆகியோர் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துரைத்தனர். பாராட்டு பெற்ற தோழர்கள் இருவரும் ஏற்புரையாற்றினர்.

சுதந்திர தின சிறப்புரையாக மாவட்டச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.லோகநாதன் உரையாற்றினார். 

மாவட்டத் தலைவர் தோழர் P.ஜெயராமன், மாவட்ட செயலர் தோழர் R.அசோகன் ஆகியோர் மாநில, மாவட்ட சங்க நிகழ்வுகள், பென்ஷன்தாரர்களி ன் பிரச்சினைகளின் தீர்வுகள் ஆகியவற்றை தொகுத்து வழங்கினர். 

மேலும் மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் R.சாந்தகுமார் அவர்கள் வாழ்த்தி பேசினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர் A.R.கலியமூர்த்தி அவர்கள் தின்பண்டம் & தேனீர் வழங்கினார். குடும்ப ஓய்வூதியர் திருமதி புஷ்பா செல்வராஜ் அவர்கள் தனது வீட்டில் தயார் செய்து எடுத்து வந்த சிறுதானிய கொழுக்கட்டையை அனைவருக்கும் வழங்கினார். பின்னர் பகுதி பொருளாளர் தோழர் R.நந்தகுமார் நன்றியுரை வழங்கிட இன்றைய கூட்டம் நிறைவுற்றது.

கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர்🙏


















No comments:

Post a Comment