12.08.2022 செய்தித்துளிகள் :
DOT ஓய்வூதியர் திரு P Ayyasamy retired SDE CDL அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வு ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பதை நமது மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் அவர்கள் கண்டுபிடித்து தோழரிடம் தெரிவித்து அதற்கான கடிதங்களை தயாரித்து CCATN அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். திரு அய்யாசாமி அவர்களுக்கு ஏறத்தாழ ஐந்து லட்சம் முதல் 7 லட்சம் வரை ஓய்வுதிய மாற்ற நிலுவைத் தொகை வருவதற்கு வாய்ப்புள்ளது. இம்மாதிரியான ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை துருவித் துருவி ஆராய்ந்து அவர்களுக்குரிய பலனை பெற்றுத் தருவதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சி தான்.
ஆகஸ்ட் 7 8 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற நமது சங்க மாநில மாநாட்டில் கடலூரிலிருந்து 48 தோழர்கள் கலந்து கொண்டனர் .ஏறத்தாழ 500 சார்பாளர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரிய விஷயம் . 56 வயது சார்பாளர் முதல் 84 வயது சார்பாளர்கள் வரை கலந்து கொண்டது நமது சங்கத்தின் உருக்குலையாத ஒற்றுமையை பறைசாற்றியது.
சேலத்து மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களின் " குறையொன்றும் இல்லை கண்ணா" என்பதற்கு இலக்கணமாக சேலம் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு மாநாடு நடந்த மூன்று நாட்களிலும் எவருக்கும் எந்த குறையுமின்றி அறுசுவை உணவு, சரியான இருப்பிட வசதி,இன்முகத்துடன் கூடிய வரவேற்பு எந்தப் பிரச்சனையை எடுத்துச் சொன்னாலும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்வதிலும் அவர்கள் காட்டிய அக்கறை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . தொழிற்சங்க மாநாடுகளை தோற்கடிக்கும் விதமாக இந்த நல சங்க மாநாட்டை சிறப்புடன் செய்த சேலம் கிழக்கு மாவட்ட தோழர்களை கடலூர் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. ஒரு குடும்ப நிகழ்வுகளில் நடத்தப்படும் இம்மாதிரியான பெரும் கூட்டம் கூடும் இடங்களில் கூட சில சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் சேலம் மாநாட்டில் இம்மாதிரியான எந்தவிதமான முனுமுனுப்பு மின்றி சிறப்புடன் செயல்பட்ட வரவேற்பு குழுவற்கு மீண்டும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
தோழர் ஹாருண் பாஷா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கானத்தூரில் இருந்து CCATN அலுவலகத்திற்கு வந்து கடலூர் மாவட்ட உறுப்பினர்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துக் கூறி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு உதவிகரமாக உள்ளார்.இன்று (12/08/2022) மூன்று தோழர்களுக்கு மேப்பிங் சர்டிபிகேட் பெற்று அனுப்பியுள்ளார். இன்று காலை எட்டு மணிக்கு பேருந்தில் கானத்தூரில் இருந்து புறப்பட்டு CCATN அலுவலகம் வந்து உறுப்பினர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். அவருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். அதேபோல் தோழர் துரை மற்றும் ராம்குமார் ஆகியோர்களின் பணியும் போற்றத்தக்கது. இந்த அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் மேலும் மேலும் வளர்ச்சி பெறும் என்பதற்கு இவர்களே உதாரணங்கள்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி நமக்கு வரவேண்டிய ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமான வழக்கு 6/9/2022 அன்று இறுதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை தரும் என்று எதிர்பார்ப்போம்.
78.2 நிலுவைத் தொகை வழக்கு (1.1.2007 முதல் 9.6.2013 வரை) எர்ணாகுளம் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT Ernakulam) 9.11.2022 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தின் சார்பாக மாநிலச் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் N திருஞானம் , தோழர் K வீரராகவன் ஆகியோர்களை மாவட்ட சங்கம் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். நம் மாவட்ட பிரச்சனைகளை மாநிலச் சங்கத்திற்கு கொண்டுசெல்லும் இணைப்புப் பாலமாக அவர்கள் விளங்க வேண்டும்.
No comments:
Post a Comment