Tuesday, 30 August 2022

 மாநிலச் செயலருக்கு நன்றி!

29/8/2022 அன்று நமது மாநில செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் CCATN அலுவலகம் நேரில் சென்று நமது கடலூர் மாவட்ட உறுப்பினர்கள் பிரச்சனைகள் அனைத்தையும் விவாதித்து வந்துள்ளார். 

குடும்ப ஓய்வூதியர்கள் தோழர் வெற்றி, தோழர் மாரியப்பன், தோழியர் மலர்கொடி, தோழியர் நித்திலவள்ளி, தோழியர் பத்மபிரியா ஆகியோர்களின் குடும்ப ஓய்வூதியம் பற்றியும் , மற்றும் தோழியர் அம்சா அவர்களின் மகள் சுமதி அவர்களுக்கு வரவேண்டிய life time arrears பற்றியும், தோழியர் ராஜகுமாரி தமிழ்மணி அவர்களுக்கு வழங்க வேண்டிய பென்ஷன் அனாமலி நிலுவைத்தொகை பற்றியும் எடுத்துக் கூறிவந்துள்ளார். 

மாநிலச் செயலாளர் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இன்று (30/08/2022) CCATN அலுவலகமும் முதன்மை பொதுமேலாளர் தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிர்வாகமும் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 

மீண்டும் ஒருமுறை மாநில செயலாளர் அவர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

மாவட்ட சங்கம்

AIBSNLPWA Cuddalore.

No comments:

Post a Comment