கடந்த நான்கு மாதங்களாக போராடி வந்த குடும்ப ஓய்வூதியர் திருமதி ஜோதி திருக்கோயிலூர் அவர்களின் ஓய்வூதிய பிரச்சனை இன்று முடிவிற்கு வந்துள்ளது . அவர் வங்கியிலிருந்து தபால் நிலையத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார். CPPC இந்தியன் வங்கி தோழியருடைய ஓய்வூதிய புத்தகத்தின் மற்றொரு Copy யினைத் தொலைத்து விட்டதால் பிரச்சனை ஏற்பட்டது . தோழர் துரை மற்றும் தோழர் ராம்குமார் அவர்களின் தொடர் முயற்சியால் இன்று அவரது கோப்பு (file) கையெழுத்தாகி despatchக்கு சென்றுள்ளது. விரைவில் அவர் ஓய்வூதியத்தை நிலுவையோடு பெறுவார். பொறுமை காத்த தோழியர் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
7/08/2022, 08/08/2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு சேலம் மாவட்ட வரவேற்புக் குழு ஏழாம் தேதி காலை முதல் எட்டாம் தேதி காலைவரை இருப்பிட வசதி செய்துள்ளதாக கூறியுள்ளது . இது நமது சங்கம். அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் தனது உறுப்பினர்களுக்கு ஒரு அரணாக இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களது நலனைக் காப்பதிலும் அவர்களுடைய உரிமையை பெற்றுத் தருவதிலும் எந்த சமரசமும் இன்றி வெற்றியினை பெற்றுத் தருவதால் கடலூர் மாவட்ட தோழர்கள் சேலம் மாவட்ட வரவேற்பு குழுவிற்கு நம்முடைய ஒத்துழைப்பை தருவோம். மாநாடு சிறப்புற நம்முடைய ஒத்துழைப்பை கொடுப்போம். வாழ்க சேலம் மாநாடு! வளர்க AIBSNLPWA !
No comments:
Post a Comment