Monday, 7 April 2025

 06.04.2025 AIBSNLPWA விழுப்புரம் பகுதி சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம்

தோழர் .பெருமாள் தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர். தோழர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மறைந்த தோழர். யூசுப்கானுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது.

தோழர் G.கணேசன் தங்கள் பகுதி செயல்பாடுகள் பற்றியும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் மாவட்ட சங்கத்திற்கு தகவல்களைத் தொகுத்து வழங்கினார்.

தோழர்கள். மோகன்குமார், தஸ்தகீர்கான், ஹரிகிருஷ்ணன் , CAO சண்முக சுந்தரம், செல்வம், உளுந்தூர்பேட்டை தோழரும் மாவட்ட சங்கத்தின் நிர்வாகியுமான தோழர்.ஜெகன்னாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தோழர்.P.ஜெயராமன் DGS, தகுந்த பதில்களையும் நம் சங்கம் எடுத்து வரும் சரியான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் 25.03.25 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பென்ஷன் மசோதா திருத்த வரைமுறை குறித்தும் அதனால் பென்ஷனருக்கு வரப்போகும் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றியது சிறப்பாக  இருந்தது.

மாநில சங்கத் துணைத் தலைவர். தோழர். N.T 03.04.25 அன்று  கடலூர் மாவட்டம் அனைத்து தமிழக அரசு பென்ஷனர்கள், பொதுத்துறைப் பென்ஷனர்கள், அஞ்சல் துறை பென்ஷனர்கள், DOT,BSNL பென்ஷனர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பெருந்திரள் கண்டன கூட்டத்தில் விழுப்புரம் பகுதியிலிருந்து 60க்கும் அதிகமான தோழியர்கள் உள்ளிட்ட தோழர்களைப் பங்கேற்க வைத்த விழுப்புரம் பகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதோடு அடுத்து நம் அனைத்து இந்திய சங்கம் திட்டமிட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் கேரளா மாநிலம் கொச்சி எர்ணாகுளத்தில். வரும் நவம்பர் 8,9 தேதிகளில் நடக்க உள்ள நம் நலச்சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஏற்பாடுகள், அந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.100/- நன்கொடையாக அவசியம் வழங்க வேண்டும்‌ என்றும் அதுபோல் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள மாநில சங்கத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

STR  பகுதியிலிருந்து பணி ஓய்வு பெற்ற தோழர்.சக்கரவர்த்தி நம் சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்

 இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு சித்த மருத்துவ முறையில் நாம் கைக்கொள்ள வேண்டிய வைத்திய முறைகளை எடுத்துரைத்த டாக்டர் ராகுல் ராஜ், கைத்தறி ஆடை அணிவித்து கௌரவப் படுத்தப்பட்டார்.

இன்றைய கூட்டத்தில் 15 தோழியர்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட சங்க

நிர்வாகி தோழர் பாஸ்கர் நன்றி கூறிட கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Friday, 4 April 2025


AIBSNLPWA சங்க அறிவுறுத்தல் படி 3.4.2025 அன்று மத்திய மாநில ஓய்வூதியர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து டாக்சி ஸ்டாண்டில் கண்டன உரை கூட்டமும் நடைபெற்றது.
    ஏறத்தாழ 400 தோழர்கள் கலந்து கொண்டது பிரச்சனையின் தாக்கத்தை அனைவரும் உணர்ந்துள்ளதை காட்டியது.
    தோழர்கள் T.புருஷோத்தமன் TNGPA, தோழர் P.ஜெயராமன் AGS,AIBSNLPWA இருவரும் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னிலை வகித்தனர்.
    தோழர் ஜெயராமன் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கூறினார்.
    தோழர் புருஷோத்தமன் அவர்கள் இன்று மத்திய அரசு ஓய்வூதியர்கள் மீது தொடுக்கப்படும் அநீதிகள் நாளை மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டிய நிலைமையை எடுத்துக் கூறினார்.
    முதற்கண் தோழர் R ஸ்ரீதர் சம்மேளன செயலாளர் NFTE_BSNL அவர்கள் கண்டன உரையாற்றினார். ஓய்வூதிய வரைமுறை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் அது ராஜ்ய சபாவில் ஒப்புதல் பெறவேண்டிய தேவை இல்லை என்பதையும், பல்வேறு பொதுத் துறைகள் மாநில அரசு பொதுத் துறைகள் போன்றவற்றில் உள்ள ஓய்வூதிய முரண்பாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார். நம் பிரச்சினைகளுக்கு போராடுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். நமது மாவட்ட தலைவர் தோழர் சாந்தகுமார் அவர்கள் மூத்த குடிமக்களாகிய ஓய்வூதியர்களுக்கு இருந்த பல சலுகைகளை ஆளுகின்ற அரசு பரித்ததையும், ஆளுகின்ற மத்திய அரசு நியமித்த பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் உதாசீனப்படுத்தியதை தெளிவாக எடுத்துரைத்தார். எட்டாவது ஊதியக்குழு அமைவதற்கு ஆணை வெளியிட்டாலும் ஆனால் அதற்கான எந்த பணியும் தொடங்காமல் இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறம் தள்ளி ஊதிய மாற்றம் வந்தாலும் ஓய்வூதிய மாற்றம் கிடைக்காது என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளதை கண்டித்தார்.
    மற்றும் இன்சூரன்ஸ்,BSNLEU,AIBDPA, போஸ்டல், வங்கிகள்,மாநில அரசை சேர்ந்த பல்வேறு ஓய்வூதியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
    திரளாக வந்து போராட்டத்தை வெற்றி பெற செய்த பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.
இந்த போராட்டத்திற்கான ஆயத்தங்களை செய்த தோழர்கள் N.அன்பழகன், E விநாயகமூர்த்தி, R .நந்தகுமார், S.ராஜேந்திரன், P.சிவக்குமரன், N.ஜெயராமன், A.விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயல்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.





Sunday, 13 October 2024

 விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம் 13.10.2024

விருத்தாசலம் பகுதியின் மாதாந்திர கூட்டம் 13.10.2024 மாலை நான்கு மணியளவில் தலைவர். M. ஞானசேகரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள ஒருங்கிணைப்பாளர் வரவேற்றிட கூட்டம் தொடங்கியது. புதியதாக இணைந்த தோழர்கள். சின்னதுரை, முத்துராமன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

தோழர்கள் ஜெகந்நாதன், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் V.நல்ல தம்பி, தோழர். அருள்லாரன்ஸ், மோகன்ராஜ் விருத்தாசலம், விஸ்வலிங்கம் பெண்ணாடம், சுப்பிரமணியன் SDE திட்டக்குடி, முறையே மெடிக்கல் அலவன்ஸ், வாழ்நாள் சான்றிதழ், சென்னை சொஷைட்டி, 78.2 % போன்ற பிரச்சனைகளை தீர்வுகண்டிட நினைவுறுத்தினர்.

மாவட்ட அமைப்பு செயலர் G.அசோகன், மாநில துணைத்தலைவர் தோழர் திருஞானம் ஆகியொர் சிறப்புரையாற்றினர்.  தோழர் NT அவர்கள் மாவட்டச் சங்கம், மாநிசங்கம், கில இந்திய சங்கம் ஆகியவைகளின் செயல்பாடுகள், இன்றைய கேள்விக்குறியாக உள்ள pension revision வழக்குகள், chennai society, 78.2%, மருத்துவ  அலவன்ஸ் பணப்பட்டுவாடா, CGHS ல் சேர்வதினால் கிடைக்க கூடிய  நன்மைகள், பாட்டியால செயற்குழு முடிவுகள், தோழர்களின் கேள்விகளுக்கு தேவையான பதிலையும், மாவட்ட செயலரின் இடைவிடாத பணிகளையும், அண்ணாச்சி அவர்களின் மற்றதுறைசார்ந்த ஓய்வூதியர்களுக்கும் அளப்பரியபணியையும், குடும்ப ஓய்தியர்களின் நிலுவைத்தொகையினை பெற்றுத்தருகின்ற பாங்கினையும் மிக அருமையாக எடுத்துரைத்தார்.

தோழர்கள். திண்டிவனம் ஹாரூன்பாட்சா, விநாயகம் போன்றவர்களின் வியப்பான பணிகளை எடுத்துக் கூறியது மெய்சிலிர்க்கவைக்கின்றது.

இறுதியாக B.கிருஷ்ணமூர்த்தி  பொருளாளர் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது






Thursday, 10 October 2024

திண்டிவனம் பகுதி புணரமைப்பு - 

மாதாந்திர கூட்டம் 10-10-2024

தலைவர் தோழர் R.ராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நமது பகுதியின்  ஒருங்கிணைப்பாளர்  தோழர் D. திருவிக்கிரமன் வரவேற்புரையாற்றினார் மூத்த தோழர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்  S. நாராயணசாமி அவர்கள் எதிர்கால பிரச்சனைகள் பற்றியும் புனரமைப்பு கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து ஒரு கணிசமான தொகையை இருப்பு வைத்து செலவினங்களை செய்து கொள்வது பற்றியும் நமது சங்கத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பல முன்னணி தோழர்கள் நமது சங்கத்தில் சேர்ந்துள்ளார்கள் என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். நமது பகுதியின் முன்னணி தோழர் S.நடராஜன் )அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் சொசைடியின் நம்பிக்கை இல்லா பாங்கினையும் எடுத்துரைத்தார்.

தோழர் J தர்மலிங்கம் SDE அவர்கள்    சங்கத்தின் தோழர்களின் மனித நேயமிக்க பணியினை பாராட்டி புகழ்ந்து பேசினார்.

மாவட்ட உதவி செயலாளர் Y.ஹாரூன்பாஷா அவர்கள் சாம்பனின் செயல்பாடுகளை யும் profie Data வின் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

தோழர் A முனுசாமி அவர்கள் நமது பகுதி வளர்ச்சியையும் எந்தவித சந்தேகங்களை தயங்காமல் கேட்கலாம் என்று கூறினார்.

மாநில சங்க நிர்வாகி தோழர் N.திருஞானம் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் நீதிமன்ற பிரச்சனை, PENSION ரிவிசன் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்து P.வினாயகம் SDE .Y ஹாருன் பாஷா JE ஆகியயோரின் சேவைகளை பாராட்டினார்.

மாவட்ட செயலாளர் தோழர் அசோகன் அவர்கள் KYP பற்றியும் பிறந்த தேதி ஆதார் பான் இணைப்பு பற்றியும் தெளிவாக கூறினார்.

அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் அண்ணாச்சி  அவர்கள் ஏழாவது ஊதிய குழுவின் நீதிமன்ற செயல்பாடுகளையும் நமது சங்கம் கையாண்ட அணுகுமுறையும் விதவைகளுக்கு தேடி சென்று பென்சன் வாங்கி தந்ததையும் அரியர்ஸ் 10 லட்சத்திற்கு மேல் வாங்கி கொடுத்தது இந்த சங்கம் என்பதையும்  பாட்டியாலா செயற்குழுவின் தீர்மானங்களை பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்தார்.