பண்ருட்டி புதிய பகுதி துவக்க விழா
28-7-2024 அன்று பண்ருட்டியில் துவக்க விழா தோழர் K.பழனிமுத்து அவர்கள் தலைமையில், தோழர் V.முத்துசாமி அவர்கள் தேசிய கொடியையும், தோழியர் S.செல்வரசுமேரி அவர்கள் சங்கக் கொடியையும் ஏற்றிட, கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் E.வினாயகமூர்த்தியின் கருத்தாழமிக்க கோஷங்களுடன் விழா இனிதே துவங்கியது.
தோழர் P.சுந்தரமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்திட, தோழர் T.வைத்திநாதன் மறைந்த தலைவர்களை, ஓய்வூதியர்களை நினைவுகூர்ந்து அஞ்சலியுரை நிகழ்த்தினார்.
மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் G.ரங்கராஜு துவக்கவுரையாற்றினார்.
மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.லோகநாதன், கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் E.வினாயகமூர்த்தி, விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் G.கணேசன், சிதம்பரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் T.விஸ்வலிங்கம், மாவட்ட உதவிச்செயலர்கள் தோழர் Y.ஹாரூன்பாஷா, N.அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர் A.ஜெயக்குமார், தோழர் S.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டச்செயலர் தோழர் R.அசோகன், பொருளாளர் தோழர் R.நந்தகுமார் மாவட்ட சங்கத்தின் செயல்பாடு, எதிர்காலகடமைகள் பற்றி விரிவான உரையைத்தந்திட்டனர்.
மாவட்டத்தலைவர் தோழர் K.சந்திரமோகன் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சனைகள் தீர்விற்கு உறுப்பினர்களின் விவரங்களை சரியாக கிளைகள் பராமரிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி பண்ருட்டி பகுதியின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வினை நடத்தி ஒருமனதான பட்டியலை வெளியிட்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மாநிலச்சங்க துணைத்தலைவர் தோழர் N.திருஞானம் பண்ருட்டி பகுதியில் துவக்க விழா சிறப்பாக ஏற்பாடு செய்து உறுப்பினர்களை அதிக அளவில் பங்கேற்க செய்திட்டதை பாராட்டினார்.
சிறப்புரையாக அகில இந்திய துணைப் பொதுச்செயலர் தோழர் P.ஜெயராமன் அவர்கள் நமது அமைப்பு கடந்து வந்த பாதை, குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சனைகள் தீர்வில் எடுத்திட்ட முயற்சி என அனுபவங்களை முழுமையாக விவரித்தார்.
மாவட்ட முழுவதிலுமிருந்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் காலத்தே கலந்து கொண்டனர். துவக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நெய்வேலி தோழர் P.மாயகிருஷ்ணன் நன்றி கூறி விழாவினை நிறைவுசெய்தார்.
No comments:
Post a Comment