விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம், பென்ஷனர் தின கூட்டம்
17/12/2023 காலை 10 மணிக்கு பகுதி தலைவர் தோழர் G.ராமசந்திரன், தமிழ்த்தாய் வாழ்த்து தோழர் ராஜு பாடிட, அஞ்சலி வரவேற்புரையை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G.கணேசன் ஆற்ற, தலைமை உரை தோழர் G.ராமசந்திரன், வாழ்த்துரை தோழர்கள் செல்வம், சபாபதி, சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்புரை அகில இந்திய உதவி செயலாளர் தோழர் P.ஜெயராமன் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
அகவை என்பது கடந்து உடல் நலம் குன்றிய உறுப்பினர்கள் பொன்னுசாமி, பம்பாபதி, சம்பந்தம் ஆகியோரை மரியாதை செய்யும் பொருட்டு அவர்களின் இல்லத்திற்கு சென்று கிரீடம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment