கடலூர் பகுதி
மாதாந்திர கூட்டம்-14.10.2023
14.10.2023 சனிக்கிழமை மாலை 3:30 மணி அளவில் கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் தோழர்.B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர். பகுதி அமைப்பு செயலாளர் தோழர். E.விநாயகமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்காலகட்டத்தில் மறைந்தோர் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட தலைவர் தோழர்.K.சந்திரமோகன் அவர்கள் ஏழாவது சம்பளக் குழு அமைக்கப்பட்ட உடனே நமது சங்கம் பென்ஷன் ரிவிஷனுக்காக எடுத்த முயற்சிகளை பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். வழக்கு நடைபெறும் போது நீதிமன்றத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விவாதங்களையும் எடுத்துரைத்தார்.
மாநில துணைத் தலைவர் தோழர். N.திருஞானம் அவர்கள் பேசும்போது தீர்ப்பின் சிறப்புகளையும் மாநிலம் முழுதும் உள்ள தோழர்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.
செயற்குழு உறுப்பினர் தோழர். P.சாந்தகுமார் அவர்கள் பேசும்போது ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின் அடிப்படையில் பென்ஷன் கணக்கீடு பற்றிய தகவல்களையும் CWCல் கலந்து கொண்ட தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
மாவட்டச் செயலர் தோழர் R.அசோகன் அவர்கள் பேசும் பொழுது தலமட்ட பிரச்சனைகள், இம்மாதம் நடைபெறவிருக்கும் அதாலத், நீதிமன்ற தீர்ப்பை பற்றி நிலவுகின்ற எதிர்மறையான கருத்துக்கள் போன்றவற்றையும் அக்கருத்துக்களால் நமது தோழர்கள் குழப்பம் அடையாமல் அமைப்பின் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் பேசினார்.
நமது பகுதி கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர்.ராஜேந்திரன் அவர்கள் வருகை தந்து நம்மை பெருமைப்படுத்தியதோடல்லாமல் வாழ்த்துரையும் வழங்கினார். அவருக்கு கதராடை அணிவித்து கௌரவித்தனர். அகமதாபாத் மத்திய செயற்குழுவில் கலந்து கொண்ட தோழியர்.விஜயலட்சுமி அவர்கள் பேசும்போது செயற்குழுவில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக அகில இந்திய துணை பொதுசெயலாளர் தோழர். P.ஜெயராமன் அவர்கள் பேசும்போது இந்த வழக்கில் நாம் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசினார். மேலும் தோழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் நுணுக்கமான விபரங்களை பகிர்ந்து கொண்டார். அனைவருக்கும் எவ்வித முரண்பாடும் இல்லாத வகையில் பென்ஷன் மாற்றம் பெறுவதற்கு நமது சங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி மத்திய செயற்குழுவில் நடைபெற்ற விவாதங்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ருட்டியை சேர்ந்த நமது மூத்த உறுப்பினர் தோழர்.S.நடராஜன் I அவர்கள் நமது சங்கத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக அளித்தார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி. பகுதிச் செயலர் தோழர்.V.இளங்கோவன் அவர்கள் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment