Friday, 21 October 2022

செய்தி துளிகள்

21/10/2022 செய்தித்துளிகள்:  

தோழர்களே ! தோழியர்களே ! அனைவருக்கும் வணக்கம். மாவட்ட சங்கத்தின் சார்பாக இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1. திருமதி எஸ்தர் யசோதா குடும்ப ஓய்வூதியர் W/o.செபாஸ்டின் TS அவர்களுக்கு எண்பது வயது முடிந்தவுடன் தரப்பட வேண்டிய கூடுதல் 20 சதவீத ஓய்வூதியம் தரப்படாமல் இருந்ததை   நமது மாவட்ட தலைவர் தோழர் P.ஜெயராமன் அவர்கள் கண்டுபிடித்தார். மாவட்டச் சங்கம் தோழியருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலனை பெறுவதற்கான முயற்சிகளை தொடங்கியது. முதலில் தோழியர் அவர்களை திண்டிவனம் தபால் நிலையத்தில் கடிதம் கொடுக்க வைத்தோம். பின்னர் திண்டிவனம் தோழர் விநாயகம் அவர்களை தொடர்பு கொண்டு பிரச்சனையை எடுத்துரைத்தோம். அவர் திண்டிவனம் தபால் நிலைய அதிகாரி, செஞ்சி தபால் நிலைய அதிகாரி, பொதுமேலாளர் (தபால்) மற்றும் CCATN அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகளை தொடர்பு கொண்டு இடைவிடாத முயற்சியை மேற்கொண்டு 12.02.2018 தேதி பென்ஷன் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கூடுதல் ஓய்வூதிய ஆணையின் payable copyயின் நகலை 23.09.2022 அன்று பென்ஷன் அலுவலகத்தில் இருந்து பெற்று இன்று தோழியர் எஸ்தர் யசோதா அவர்கள் ரூபாய் 2.88 லட்சம் நிலுவைத் தொகை பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். மாவட்டச் சங்கத்திற்கு பக்கபலமாக நின்று உதவிகரமாக விளங்கும் தோழர் விநாயகம் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தடகளப் போட்டியில் ரிலே ரேஸ் என்கின்ற ஓட்டப்பந்தயத்தில் நான்கு பந்தய வீரர்கள் சிறப்பாக ஓடி வெற்றிக்கனியை எட்டுவது போல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றியினை பெற முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

2. திருமதி வேதவாணி w/o K.கிருஷ்ணமூர்த்தி TNV அவர்களுக்கு DCRG தொகை பெறுவதற்கான உத்தரவும் குடும்ப ஓய்வூதியத்திற்கான உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளன. . இதற்கும் பெருமுயற்சி எடுத்த தோழர் விநாயகம் அவர்களுக்கு நன்றி.

3. மெடிக்கல் பில் தொகையினை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாவட்ட சங்கம் எடுத்து வருவதை நீங்கள் அறிந்த ஒன்றே.  ஏறத்தாழ 99 விழுக்காடு ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் பில் தொகை பெறுவதற்கு மாவட்ட சங்கம் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் செய்துள்ளது.  எந்த பாரபட்சமும் இன்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் மெடிக்கல் பில் பட்டுவாடா செய்யப்படுவதற்கு நீண்ட ஒரு போராட்டத்தை மாவட்ட சங்கம் செய்ய வேண்டி இருந்தது. அவ்வப்பொழுது மாவட்ட சங்கத்தால் வாட்ஸ் அப் குரூப்பில் தரப்படும் தகவல்களை ஒழுங்காக பின்பற்றி இருந்தால் இந்த காலதாமதம் சற்று குறைந்திருக்கும்.  மாவட்ட சங்கத்தோடு இணைந்து போராடிய தோழர்கள் விழுப்புரம் ராஜ்குமார், கள்ளகுறிச்சி மணி, சிதம்பரம் ஜெயக்குமார், திண்டிவனம் விநாயகம்,   கடலூர் நந்தகுமார் ஆகியோர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

4. ஓய்வூதிய மாற்றத்திற்கான தொடுக்கப்பட்ட வழக்கானது 9/12/2022 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நமது மத்திய சங்கம் தளர்வடையாமல் பல சங்கங்களை ஒருங்கிணைத்து தொலைபேசி துறை செயலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியதன் விளைவாக 17/10/2022 அன்று தொலைபேசி துறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. Zero percent fitment  proposal ஐ நிர்வாகம் முன் வைத்ததை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்றன. எனவே கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிந்தது எனவே பரந்து பட்டஒற்றுமையினை கட்டிக் காத்திட ஏறத்தாழ 27 தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமானது தோழர் D.கோபாலகிருஷ்ணன் தலைமையில் 18/10/2022 அன்று டெல்லியில் கித்வாய் பவனில்நடைபெற்றது. AIBDPA உள்ளிட்ட ஓரிறு சங்கங்கள் தவிர 11 சங்கங்கள் நமது சங்க நிலைப்பாட்டை ஆதரித்து நம்முடன் ஒன்றுபட்டு நின்றனர். எனவே மத்திய சங்கம் எடுக்கும் எந்த முடிவிற்கும் நாம் துணை நிற்க வேண்டும்.

5. கூடுதல் இன்கிரிமென்ட் வழக்கில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் அதனை முறியடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மத்திய சங்கம் செய்துள்ளது.

6. தோழர்கள் திவ்யநாதன் VDC, B.கந்தசாமி CDL, மறைந்த தோழர் ரசீத்அலி CDL ஆகியோர்களது திருப்பி அனுப்பப்பட்ட மெடிக்கல் பில் தொகையானது அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்.

7. ஐந்து தோழர் தோழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான முயற்சிகளை மாவட்ட சங்கம் செய்தபோதிலும் CCATN அலுவலகம் காலதாமதம் செய்து வருவது கண்டனத்துக்கு உரிய செயலாகும். நேரடியான அதாலத் கூட்டம் நடைபெறாததால் நம்மால் நேரடியாக மூர்க்கமாக போராட முடியவில்லை. பென்ஷன் அலுவலகம் கேட்கும் அத்தனை தகவல்களையும் அனுப்பியும் கால தாமதம் ஆகிறது.


8. 80 வயதிற்கும் மேற்பட்டோர்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழ் (life certificate) அக்டோபர் நவம்பர் மாதங்களில் தரலாம். 80 வயதிற்கு குறைந்த ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை நவம்பர் மாதத்தில் தர வேண்டும். வங்கிகளில் இருந்து சம்பானுக்கு மாற்றப்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழை நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் தர வேண்டும் இதுவரையில் ஏறத்தாழ 10 ஆயிரம் ஓய்வூதியர்கள் வங்கிகளில் இருந்து சம்பானுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் இதுவரையில் நம் மாவட்டத்தில் உள்ள எந்த ஓய்வூதியரும் தங்களுக்கு குறுஞ்செய்தி வந்த தகவல்களை மாவட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தாததோடு தங்களது ePPOவை டவுன்லோட் செய்யவில்லை. இந்த மாதிரியான கவனக் குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் அவர்களது உயிர் வாழ்சான்றிதழ் சம்பானில் அப்டேட் ஆகாது. மேலும் இந்த முறையும் உயிர்வாழ் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் படி CCATN அலுவலகம் கூறியுள்ளது. ஆரம்பம் முதலே சம்பான் மூலமாக நேரடியாக  ஓய்வூதியம் பெறுகின்ற ஓய்வூதியர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் உயிர் வாழ் சான்றிதழ் பெற வேண்டும்.

            மாவட்ட சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்கள் உழைத்தால் மட்டும் போதாது உறுப்பினர்கள் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக அவசியம்.

          

                        WISH  YOU HAPPY DEEPAVALI


                              AIBSNLPWA CUDDALORE DISTRICT UNION. 






No comments:

Post a Comment