சிதம்பரம் பகுதி
மாதாந்திர கூட்டம்
சிதம்பரம் பகுதியின் எட்டாவது மாதாந்திர கூட்டம் தெற்கு சன்னதி தொலைபேசி நிலையத்தில் 16.10.2022 காலை 10 மணிக்கு பகுதி தலைவர் தோழர் டி.விஸ்வலிங்கம் அவர்கள் தலைமையேற்று நடத்திட வரவேற்புரை மற்றும் கடந்த கால செயல்பாட்டினை திரு ஜி.எஸ். குமார் பகுதி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் விரிவாக எடுத்துரைத்தார். அவரது குறிப்பில் இந்த மருத்துவ அலவன்ஸ் தொகை சிலருக்கு வந்திருக்கிறது, வரவில்லை என்று கூறினார்கள் .அதில் 8.7.2020 அன்று 104 உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தினை குறிப்பிட்டிருந்தார்கள் அதில் பெரும்பாலோருக்கு பணம் வந்திருக்கிறது. வராதவர்களுக்கு கடிதம் வாங்கி அதை மாவட்ட சங்கத்திற்கு அனுப்ப உள்ளோம் .விரைவில் கிடைக்க ஆவண செய்வோம். இது தவிர நிறைய பேருக்கு மருத்துவ அலவன்ஸ் தொகை வந்திருக்கிறது அவர்களும் தொகையை குறிப்பிட்டிருக்கிறார்கள். பெருமுயற்சி செய்த மாவட்ட சங்கத்திற்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்திற்கும்குறிப்பாக திருமதி உமாமகேஸ்வரி கணக்கதிகாரிக்கு நன்றி கூறுகிறோம்.அடுத்ததாக பகுதியின் நிதி நிலை சற்று கவலையாக இருக்கிறது, அதனை மேம்படுத்த மருத்துவ அலவன்ஸ் பெற்றவர்கள் தாராளமாக கிளைக்கு நன்கொடை அளிக்கவும், அதே போல் மாவட்ட சங்கத்திற்கும் நிறைய நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதன்படி உடனடியாக அதனை ஏற்று சிலர் நன்கொடை அளித்துள்ளார்ககள் திரு ஹெச். இஸ்மாயில் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது, அதனை சிரம் மேற்கொண்டு நன்றாக பயன்படுத்திக் கொண்டு மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரு சாந்தகுமார் மாவட்ட சிறப்பு அழைப்பாளர் அவர்கள் தனது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தார். சி ஜி எச் எஸ் பற்றியும் நமது ஓய்வூதிய மாற்றம் குறித்து நாம் எதிர்பார்க்கின்ற தொகைகள் மற்றும் மாற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து திரு ஜெயக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அவர் வாழ்த்துரையில் உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஓய்வூதியர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்றும், நம் கேடர் வித்தியாசம் இன்றி ஒன்றாக இருந்து நமது இந்த ஓய்வூதிய மாறுபாட்டை எதிர்கொண்டு சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.
திருமதி ராஜகுமாரி தமிழ்மணி அவர்கள் வாழ்வியல் தத்துவம் பெண்மை போன்ற வேண்டியது ஏன்? எழுத்துக்களில் உயிரெழுத்து மெய்யெழுத்து தனித்திருந்தால் மதிப்பில்லை உயிர்மெய் எழுத்தாக இருந்தால் தான் மதிப்பு என்று ஓர் அருவி போல் எடுத்துரைத்தார்.
அதனை அடுத்து மாவட்ட செயலாளர் திரு ஆர் அசோகன் அவர்கள் தமது சிறப்பு உரையில் இந்த மருத்துவ அலவன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது அதற்கு யார் தகுதி உடையவர்கள், அதில் சிலருக்கு வேறுபாடு தொகை வந்ததற்கான காரணங்கள் பற்றி எடுத்துரைத்தார் .சி.ஜி.எச்.எஸ் மாற மெடிக்கல்கார்டு சரண்டர் சர்டிபிகேட் பெற்ற அன்றிலிருந்து பிஎஸ்என்எல் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள், அதுவரையில்தான் நிலுவை தொகை வழங்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டார் அடுத்ததாக தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று திருமதி ராஜகுமாரி தமிழ்மணி அவர்கள் பிரச்சனை நீண்ட நாள் உள்ளது அதுவும் விரைவில் தீர்க்கப்படும் என்று எடுத்துரைத்தார்.
சிறப்புரையாக மாவட்ட தலைவர் திரு பி.ஜெயராமன் அவர்கள் நல்லதொரு சிறப்புரை வழங்கினார் அவர் ஏன் சிஜிஎச் எஸ்ஸிற்கு செல்ல வேண்டும், நமது பென்ஷன் மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நாளை மாலை DOT ஆல் நடத்தப்பட்ட உள்ளது. நமது அகில இந்திய பொதுச்செயலர் கங்காதராவ் மற்றும் டி.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உள்ளனர். விரைவில் சரி செய்யப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார் ஜீரோ பர்சன்ட் பிஃட்மென்ட் தேவையில்லை என்பதற்கான காரணங்களை எடுத்துக் கூறினார் .இறுதியாக சொசைட்டி பற்றி குறிப்பிடும் பொழுது நாம் நமது நலச்சங்கம் மூலமாக அனைவருக்கும் தொகை கிடைக்க ஒரு வழக்கு தொடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார் மற்றவர்களைப் போல் நிர்வாகிகள் போட வேண்டும் சங்கத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுடைய தொகையை வழங்கிட வேண்டும் என்று ஒரு முயற்சியை மாநில சங்கம் மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இறுதியாக திரு வி கருணாநிதி அவர்கள் நன்றி கூறினார். அவர் தனது நன்றியுரையில் இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற ஒலிபெருக்கி கருவிகள் கொடுத்து உதவிய திரு டி ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அதனை சிறப்பாக இயக்கிய எஸ். சுபாஷ் அவர்களுக்கும் நன்றி கூறினார். அடுத்ததாக கூட்டத்திற்கான செலவுகள் மற்றும் மதிய உணவையும் திருமதி பொன்னம்மாள் கண்ணையன் அவர்கள் மனமுவந்து வழங்கி உள்ளார்கள். தனது மகள் மருத்துவ செவிலியராக இருக்கிறார். அவர் பணி நிரந்தர நியமனம் பெற்றதற்காக தான் மகிழ்வுடன் இந்த விருந்து அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்ததாக இந்த சிறப்பான உணவை தயாரித்து அளித்த திரு வி.கிருஷ்ணமூர்த்தி துணைவியார் மற்றும் அவருக்கு உதவியவர்களையும் நாம் மனதார பாராட்டி தனது நன்றியுரை முடித்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்திட்ட சிதம்பரம் பகுதி தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாவட்டச் சங்கம்






No comments:
Post a Comment