25/08/2022 செய்தித்துளிகள்
1.பணி மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு GIS தொகையானது 31/03/2022 வரையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது . மற்றவர்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் பிரீமியம் தொகை அனுப்பாத காரணத்தால் இன்று வரையில் வர வைக்கப்படவில்லை. ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் ஓய்வு பெற்றவர்களுக்கு GIS தொகையானது பிஎஸ்என்எல் நிர்வாகம் அவர்களது பிரீமியம் தொகையை அனுப்பிய பிறகு வரவு வைக்கப்படும்.
2. ஆகஸ்ட் மாத சம்பளப் பட்டியலில் பதினாறு ஓய்வூதியர்களுக்கு CGHS refund தொகையானது வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.
3. Fixed Medical Allowance பெற விண்ணப்பித்த ஓய்வூதியர்களின் விண்ணப்பங்கள் உரிய அதிகாரியின் பரிந்துரையோடு CCATN அலுவலகத்திற்கு கடலூர் நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. கடலூரிலிருந்து 17 ஓய்வூதியர்களுக்கு FMA படிவங்கள் CCATN அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது ஆனால் ஏறத்தாழ 950 ஓய்வூதியர்களின் FMA படிவங்கள் CCATN அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன. படிப்படியாக விண்ணப்பித்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் போடப்படும் என்று பென்ஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
4. விருத்தாச்சலம், திண்டிவனம் தோழர்கள் மாதாந்திர கூட்டத்தோடு அமைப்பு தினத்தையும் சேர்ந்து கொண்டாடியது பாராட்டுக்குரிய விஷயம். கடலூர் சிதம்பரம் தோழர்கள் ஆகஸ்ட் மாத மாதாந்திர கூட்டத்தை சிறப்பாக நடத்தி சங்க செயல்பாடுகளை உறுப்பினர்கள் அறியும்வண்ணம் முன்னணி தோழர்களை பேச வைத்தது மிகவும் சிறப்பு.
5. CCATN அலுவலகம் ஜூன் மாதம் வரையில் VRS-2019 விருப்ப ஓய்வில் சென்ற 60 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு commutation தொகை வரவு வைத்துள்ளது . கடலூர் நிர்வாகத்திலிருந்து ஜூலை மாதத்தில் 60 வயது முடிந்த VRS-2019 விருப்ப ஓய்வில் சென்ற ஓய்வூதியர்களின் Form 1A படிவங்கள் CCATN அலுவலகத்திற்கு இந்த வாரத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
6. தோழர் அன்பழகன் அவர்களது GPF தொகை அவரது வங்கியில் வரவு வைக்கப்படாததையும் மற்றும் கலியமூர்த்தி அவர்களுக்கு commutation தொகை வரவு வைக்கப்படாததையும் கணக்கு அதிகாரியின் மூலமாக CCATN அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் பிரச்சனை தீரும்.
No comments:
Post a Comment