Thursday 14 March 2024

சிதம்பரம் பகுதி 

ஆண்டு மாநாடு 

மற்றும் 

மகளிர் தின விழா 

              12.3.24 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி சார்பாக தெற்கு சன்னதி நாடார் சத்திரத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், மகளிர் தின விழாவும் பகுதி தலைவர் டி.விஸ்வலிங்கம் விஜயலட்சுமி நந்தகுமார் இணைந்த தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையினை சமர்பித்தார். 

     மாவட்ட செயலாளர் ஆர்.அசோகன், தலைவர் கே.சந்திரமோகன், எஸ்.சாந்தகுமார், வி.இளங்கோவன், ஏ.ஜெயக்குமார்,எச்.இஸ்மாயில் மரைக்கார், கள்ளக்குறிச்சி தோழர் மணி, மகளிர் சார்பில் என்.விஜயலட்சுமி, டி.ராஜகுமாரி, கடலூர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், கீதா ஜவகர், ஆர்.கயல்விழி வாழ்த்துரையும் மகளிர் தின சிறப்புகள் பற்றியும் பேசினார்கள். 

தமிழ் மாநில தலைவர் வி.சாமிநாதன், அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மூத்த தோழியர் சரஸ்வதி ராமச்சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் 

தோழர்கள் ஜி.எஸ்.குமார் தலைவராகவும், டி.விஸ்வலிங்கம் செயலாளாராகவும்,கே.லட்சுமிநாராயணன் பொருளாளராகவும் 2024-2026ம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

விழா ஏற்பாடுகளை கே.லட்சுமி நாராயணன் தலைமையில் தோழர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, வி.கருணாநி தி,என்ராஜேந்திரன்,நாகராஜு, மாதேஸ்வரன், டெல்லி பாபு, சுந்தர் செய்திருந்தனர். 25 மகளிர் உட்பட 100 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். ‌

புதிய பகுதி செயலாளர் டி.விஸ்வலிங்கம் நன்றி கூறிய பின் விழா நிறைவு பெற்றது.





Wednesday 13 March 2024

விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம் -03/03/2024


  03/03/2024 அன்று விழுப்புரம் பகுதி மாதாந்திரகூட்டம் காலை 10 மணிக்கு பகுதி துணை தலைவர் S தஸ்தஹிர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 9 தோழியர்கள் உட்பட 79 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தை S செல்வம் பாட வரவேற்புரையை பகுதி செயலாளர் G கணேசன் ஆற்ற  மகளிர் தின வாழ்த்து களுடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது. 

வாழ்த்துரையில் தோழர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மாவட்டத் தலைவர்  K சந்திரமோகன் அவர்கள் வருமான வரி ,ஆதார் எண் பான் கார்டு எண் இணைப்பு பல்வேறு தகவல்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறப்புரை யில் நமது அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் P  ஜெயராமன் பென்ஷன் சம்மந்தப்பட்ட செய்திகள்குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு செய்திகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் 

மாதாந்திர கூட்டதிற்கு மதிய உணவு அளித்த தோழர்  D சண்முகசுந்தரம் Rtd CAO அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.. தோழியர் S தேவா மகளிர் சார்பாக நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

திண்டிவனம் மாதந்திர கூட்டம் - 06-03-2024

 அன்பு தோழர்களே !! தோழியர்களே!!!

வணக்கம்,

திண்டிவனம் AIBSNLPWA சங்கத்தின் சார்பாக 06-03-2024 அன்று தோழர் K புண்ணியகோட்டி TT கூட்டுத் தலைமையில் நடை பெற்ற மாதந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் D திருவிக்கிரன் TT அவர்கள் வரவேற்புரையாற்றினார். 22 தோழியர்கள் 25 தோழர்கள் 47 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நமது சங்கத்தின் அகில இந்திய துணை பொது செயலாளர் அண்ணாச்சி அவர்கள்  தைரியம் தன்னம்பிக்கை விடா முயற்சி போன்ற செய்திகளை பட்டியலிட்டு ஆதாரத்தோடு விளக்கி கூறினார்கள். 

 மற்றும் தோழர்கள் S.நாராயணசாமி Sr TOA, S. நடராஜன்  SDE Groups Y.ஹாருன் பாஷா JE திண்டிவனம் பகுதி சமூக‌ ஆர்வலர், R.மேனகா STS , பரிமளா JTO ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். சிதம்பரம் தோழியர் ராஜகுமாரி தமிழ்மணி மாவட்ட அமைப்பு செயலாளர் பேசுகையில் கூட்டமே அமைதி காத்து அனைவரும் அவரது பேச்சை கேட்டு ரசித்து பரவசமடைந்தனர். இறுதியாக தோழர் பரமசிவம் அவர்கள் கொண்டு வந்த மகளிர் தின   கேக்கை அனைத்து தோழியரும் ஒன்று கூடி உற்சாகமாக கேக்கை வெட்டி இனிப்பு வழங்கி ஒருவொருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அனைத்து தோழியருக்கும் தோழியர் R.மேனகா STS அவர்கள் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள். 

இறுதியாக தோழர் J. தர்மலிங்கம் SDE O/D அவர்கள் நமது பகுதி செயல்பாட்டை பற்றி புகழ்ந்து பேசி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. மற்றும் இந்த கூட்டம் நடைபெற உதவியாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பகுதியின் சார்பாக நன்றியயை தெரிவித்துக்கொள்கின்றோம்.




Monday 11 March 2024

 விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம்

விருத்தாச்சலம் பகுதியின் மாதாந்திர கூட்டம் 10.3.2024 மாலை நான்கு மணி அளவில் தலைவர் திரு.ஞானசேகரன் தலைமையில், பகுதி செயலாளர் தோழர்.ரா. ராமலிங்கம் வரவேற்புரை நல்கிட 38 தோழர்கள் முன்னிலையில் துவங்கியது. 

விருத்தாசலம் பகுதி உறுப்பினர் தோழர் K.கனகராஜ் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சாந்தகுமார் அவர்கள் தனது கருத்துரையில் CGHS சம்பந்தமான பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். இடையில் நம் உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

அடுத்து நமது விருதை பகுதியின் பொறுப்பாளர் தோழர் K.வெங்கட்ரமணன் அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு நீண்ட தொரு வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். 

நமது மாவட்ட தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் தனது உரையில் CGHS , LIFE CERTIFICATE, INCOME TAX , PENSION REVISION போன்ற பல்வேறு செய்திகளை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறினார். இடை இடையே உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

இறுதியாக அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் பா.ஜெயராமன் தனது கருத்துரையில் மகளிர் தின வாழ்த்துக்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இச்சங்கம் தீர்த்து வைத்த பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டார். 

தோழர்கள் உளுந்தூர்பேட்டை நசீர்பாஷா, ஜகந்நாதன், நல்லதம்பி, சுந்தர்ராஜ், திட்டக்குடி சுப்பிரமணியன்,பெண்ணாடம் கணபதி, விருதை கலைமணி ஆகியோர் தங்கள் கருத்துக்களை வழங்கினர். 

 இறுதியாக தோழர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.




Sunday 10 March 2024

 கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின சிறப்பு கூட்டம்

கடலூர் பகுதியின் மகளிர் தின விழா 09.03.2024 சனிக்கிழமை மதியம் 03:00 மணியளவில் சங்க வளாகத்தில் நடைபெற்றது. திரளான தோழியர்கள் பங்கேற்றனர். தோழியர் V.விஜயலட்சுமி தலைமையேற்றார். தமது தலைமை உரையில் மகளிர் தினத்தை ஒட்டி தரப்படும் சில சலுகைகளை நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மகளிர் தின வரலாற்றை சுருக்கமாக கூறினார். அரசியல், ராணுவம், விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் பிரகாசித்தாலும் சில நாடுகளில் அடிப்படைக் கல்வி கூட கற்க முடியாத நிலையில் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். நமது கடலூர் பகுதியின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கு அவர் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யலாம் என்ற கருத்தினை முன் வைத்தார். அது அனைவராலும் ஏற்கப்பட்டது. தமது பங்காகவும் துவக்க நிதியாகவும் ₹2,000 வழங்கினார். 

வரவேற்புரையில் தோழியர். மணிமேகலை அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு உடற்பயிற்சி, ஆரோக்கியம், உடல் நலம் பேணுதல், நோயற்ற வாழ்வு போன்றவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வலியுறுத்தினார். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இன்னும் நிலவுவதை வருத்தத்துடன் பதிவு செய்தார். 

சிறப்புரையில் தோழியர் சவிதா கிருஷ்ணகுமார் அவர்கள் பெண்களுக்கான அதிகாரம், மகளிர் தமது மதிப்பை உணர்தல், அவர்களுக்கான வாய்ப்பு, வளங்களை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இவற்றோடு இந்த ஆண்டு மகளிர் தின ஆய்வு பொருளான "Invest in women: Accelerate Progress" பற்றியும் மகளிர் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயல்படுவதற்கான தேவையைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

மேலும் பணி ஓய்வுக்குப் பின் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைப் பற்றியும், நிகழ்காலத்தில் வாழ்தல், விரைவான முதுமையை தவிர்த்தல் (premature aging) போன்ற பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 

தோழர். P.ஜெயராமன் அவர்கள் தனது வாழ்த்துரையில் Pensioners' Patrika வில் உள்ள மகளிர் சிறப்பு செய்திகளை பகிர்ந்து கொண்டார். குடும்ப பென்சனர்களுக்கு நமது AIBSNLPWA இயக்கம் ஆற்றும் சேவைகளை குறிப்பிட்டார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை, முதல் பெண் கவுன்சிலர் தாயாராம்மாள் ஆகியோரை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

மாவட்ட செயலர் தோழர் R.அசோகன் அவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். குடும்ப பென்சனர்கள் பிரச்சனை தீர்வில் நமது சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். 

PAN-Aadhar இணைக்காதவர்கள் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மாவட்ட சங்கம் எடுத்துள்ள முக்கியமான பிரச்சனைகளை பற்றி விளக்கினார். 

தோழியர் P.கமலா தனது வாழ்த்துரையில் எடுத்துக்காட்டாக சொல்லக்கூடிய வகையில் செயல்பட்ட மகளிர் ஆளுமைகளைப் பற்றி குறிப்பிட்டார். காஃபி டே என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட போது அவரது மனைவி மன உறுதியுடன் நிறுவனத்தை மீட்டெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருவதை குறிப்பிட்டார்.

மாவட்ட தலைவர் தோழர்.K.சந்திரமோகன் அவர்கள் தனது வாழ்த்துரையில் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேலும் குழந்தைகளுக்கு நாம் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டியவற்றைப் பற்றி விரிவாக பேசினார். 

மூத்த தோழர்.KVR அவர்கள் தனது வாழ்த்துரையில் எவ்வாறு ஒரு பெண் எல்லா வகையிலும் உறுதுணையாக உள்ளார் என்பதையும், இரும்பு பெண்மணிகள் என பெயரெடுத்த ஆளுமைகள் சிலரைப் பற்றியும் குறிப்பிட்டார். முதன் முதலில் குடும்ப ஓய்வூதியருக்கு FMA வாங்கி கொடுத்தது கடலூர் மாவட்ட AIBSNLPWA சங்கம்தான் என்பதை பெருமையுடன் பதிவு செய்தார். 

தோழர்.P.சாந்தகுமார் அவர்கள் தமது வாழ்த்துரையில் கணக்கதிகாரிகள் உருவாக்கியுள்ள அறக்கட்டளை வாயிலாக பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி மாணவர்கள், மாணவிகள், முதியோர் இல்லங்கள், தன்னார்வ சேவை நிலையங்கள் இவற்றுக்கு ஆண்டுதோறும் 15 லட்சம் ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை குறிப்பிட்டார். 

தோழர்V.நீலகண்டன் தனது வாழ்த்துரையில் பெண்களை மதித்து மரியாதையாக நடத்த கற்றுக் கொடுத்தது நமது தொழிற்சங்கங்களே என்பதை பதிவு செய்தார். மகளிர் தின வரலாறு, பெண்கள் உடல்நலம் பராமரிக்க வேண்டியதன் அவசியம், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுவது, சமுதாயத்தோடு இணைந்திருப்பது ஆகியவற்றின் அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார். 

தோழியர் மேகலா அவர்கள் தனது நன்றியுரையில் "வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டாலும் விருட்சமாய் வளர்ந்து பலனளிப்பவள் பெண்" என்று குறிப்பிட்டு புத்தகங்கள் வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நன்றி கூறி நிறைவு செய்தார்.





Thursday 7 March 2024

 கள்ளக்குறிச்சி பகுதி மாதாந்திர கூட்டம்

07.3.2024 அன்று கள்ளக்குறிச்சி தொலைபேசி நிலையத்தில் தலைவர் தோழர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது பகுதி செயலாளர் தோழர்கள் R.ராஜேந்திரன், S.மணி CGHS , மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் தோகுத்து வழங்கினார்.

தோழர் நஷீர்பாஷா உளுந்தூர்பேட்டை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

தோழர் L.ஜெகநாதன் சிறப்புறை வழங்கினார். 

நிறைவாக தோழர் T.பெத்துநாயக்கன் நன்றியுறை கூறி முடித்து வைத்தார்.